பக்கம் எண் :

140உவமவியல்

“துளிதலைத் 1தலைஇய மழையே ரைம்பால்”

(அகம். 8)

எனவும்,

“நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம்”

(அகம். 31)

எனவும்,

2“செயலையந் தளிரேய்க்கு மெழினல மந்நலம்”

(கலி. 15)

எனவும்,

“மாயிதழ் புரையு மலிர்கொ ளீரிமை”

(அகம். 19)

எனவும்,

“பான்மருண் மருப்பி னுரல்புரை பாவடி”

(கலி. 21)

எனவும்,

3“எரியுரு வுறழ விலவ மலர”

(கலி. 33)

எனவும்,

“பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு”

(முரு. 2)

எனவும்,

“பொன்னுரை கடுக்குந் 4திதலையர்”

(முரு. 145)

எனவும்,

“தீயி னன்ன வொண்செங் காந்தட்
டூவற்5கலித்த புதுமுகை 6யூன்செத்து.”

(மலைபடு. 145--6)

எனவும் வரும்; பிறவுமன்ன.

(16)

[இன்ன உவமைக்கு இன்ன வாய்பாடு உரியவென்றற்குக்
காரணம் வரலாற்று முறையா னறியப்படுமெனல்]

292.தத்த மரபிற் றோன்றுமன் பொருளே.

இது, நான்கு உவமைக்கும் ஒரோவொன்று எட்டாகக் கூறிய வாய்பாட்டிற்கெல்லாம் புறனடை.

இ--ள் : இன்னதற்கு இன்ன வாய்பாடு உரியதென்றற்குக் காரணம் என்னையென்றார்க்கு, அவை தத்தம் 7வரலாற்று முறைமையானே அவ்வவ பொருடோன்ற நிற்கும் என்றவாறு.


1. தலைஇய--பெய்த.

2. செயலை--அசோகு.

3. எரி--நெருப்பு.

4. திதலை--தேமல்.

5. கலித்தல்--தழைத்தல்.

6. ஊன் செத்து--தசையென்று கருதி.

7. வரலாறு--மரபு.