“புலி பாய்ந்தாங்குப் பாய்ந்தான்” என வினையுவமத்திற்கு வந்த ஆங்கென் கிளவி ‘தளி1ராங்குச் சிவந்தமேனி’ எனிற் பொருந்தாது. இனி, எள்ளவென்பது பயவுவமைக்கு ஏற்குமென்றான்; அது, ‘புலியெள்ளும் பாய்த்துள்’ எனலாகாது; என்னை? புலிக்கு வலி கூறினன்றி அதனோடு உவமிக்கப்பட்ட சாத்தற்குப் புகழாகாதாகலானென்பது. ஒருவனை வென்றி கூறுங்கால் அவனோடு ஒப்பிக்கின்ற புலியேற்றினை அவனைக்கண்டு எதிர் நிற்கலாற்றாது புறங்கொடுத்ததெனலும், நடுங்கிற்றெனலும், கண்2சிம்புளித்ததெனலும், அவற்குப் புகழாமென்பதே கருதிக் கூறின் கூறின உவமை 3வெளிப்பாடுமின்றி அவற்கது புகழு மாகாதென்பது கருத்து. இனி, மழையினைக் கொடைக்கு இழித்துச் சொல்லவும் பெறுபவன்றே; அவ்வாறு சொல்லினும் அதனை அவனின் இழித்து நோக்காது உலகமாதலின். விழைய வீழ புல்ல மதிப்ப வெல்ல என்பனவும், உவமை தான் பொருளையொத்தற் கவாவினவென்று பொருள் தோன்ற நிற்குமென்றவாறு. கள்ளவென்பதூஉம் அதன் குணம் அதன் கண் இல்லாமற் கதுவிற்றென்னும்பொருட்டு. பொருவவென்பதூஉம் மழையினையும் ஒருவனையும் 4உறழுந்துணைச் சிறந்தானெனச் சொல்லுதல். இவ்வாற்றான் இவை உரிமை கூறப்பட்டன. இனி, மெய்யுவமத்திற்கு உரியவெனப்பட்டனவும் அவ்வாறே ஒரு காரணமுடையபோலும். கடுப்ப என்றக்கால் வினைக்கும் பயத்திற்கும் ஏலாது; என்னை? கடுத்தலென்பது ஐயுறுதல். 5புலியோடு மறவனை ஐயுறவேண்டுவதோர் காரண
1. ஆங்கு என்பது பாய்ந்தாங்கு எனச் செய்யுள் வழக்கில் வினையோடியைந்தன்றி வராமையிற் பொருந்தா தென்றார். 2. சிம்புளித்தல்--கண்மூடல் 3. வெளிப்பாடு--வெளிப்படுதல் (தோற்றம்) 4. உறழ்தல்--மாறுபடல். 5. இது முதலாகக் கடுத்த என்னும் உவம உருபு வினை பயன் உரு என்னும் மூன்றற்கும் பொருந்தாமைக்குக் காரணங் கூறுகின்றார். புலியொடு மறவனை என்னும் வாக்கியத்தில் வினை பற்றி என்பது விடப்பட்டிருத்தல்வேண்டும். |