பக்கம் எண் :

பொருளதிகாரம்143

[உவமை எட்டாகுமெனல்]

293.*நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.

இதுவும், மேலனவற்றையே பகுக்கின்றது.

இ--ள் : வினை பயன் மெய் உரு எனப்பட்ட நான்கும் எட்டாம் பகுதியும் உண்டு என்றவாறு.

அவை: உவமத்தொகை நான்கும் உவமவிரி நான்குமென எட்டாதலும் உடையவென்றவாறு. அவை:--புலியன்ன பாய்த்துள் ‘புலிப்பாய்த்துள்’ எனவும், மழையன்ன வண்கை ‘மழை வண்கை’ எனவும், வேயன்ன தோள் ‘வேய்த்தோள்’ எனவும், பவளத்தன்ன வாய் ‘பவளவாய்’ எனவுந் தொகைவிரி பற்றி நான்கும் எட்டாயினவாறு. 1சொல்லோத்தினுள் இவ்வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது ஆண்டுத் தொகையாராய்ச்சிப்பட்ட மாத்திரையானே கூறினான்; அவ்வுவமத்தான் ஈண்டுக் கூறப்படுதல் 2பொருளினவாகலானும், இடைச் சொல்லேயன்றிப் 3பொருள் பயப்பனவும் அவ்வுருபாகலானும், அதன் விரிவினை ஈண்டுப் பெயர்தந்து கூறி அதன்றொகையொடு படுப்ப இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகை யுவமமும் என்றானென்பது.

இதுவுமொரு கருத்து:-- முன்னர் எவ்வெட்டாகக் கூறியவை ஒவ்வொன்றும் இரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய வென்றவாறு. யாங்ஙனமெனின்,--அன்ன என்னுஞ் சொன் முதலாகிய எட்டனுள் அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் 4வேறொரு பொருளை உணர்த்தாமையின் ஓரினமாகி


*இதற்கு வேறு பொருள் கூறுவர். இளம்பூரணர்.

1. சொல்லோத்து--சொல்லதிகாரம்.

2. பொருளின--பொருள்மாத்திரைய.

3. பொருள்--உவமப்பொருள்

4. வேறொரு பொருளை யுணர்த்தாமையினென்றது--உவமையும் உவமேயமும் வேறல்ல ஒன்றேயென்னும் ஒரேபொருளை உணர்த்தலின் என்றபடி. புலியன்ன மறவன் என்றவழி அன்ன வென்பது மறவன் புலியே வேறன்று என்பதை யுணர்த்திநிற்குமென்றபடி. ஏனைய மூன்றுருபுமன்ன. இதுவே கருத்தாதல்விறத்தன் முதலியவற்றிற்குப் பின்னர்க் கூறும் பொருளான் உணர்க.