ஒன்றாகவும், 1விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடைமையின்2ஒரு பொருளாகவும், இவ்வாறே இன நோக்குதற் குறிப்பின3வாயிற்று;4இவ்வாற்றான் இரண்டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச்சொல்எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியுமென்னும் பொருட்டு. உறழ்ச்சியுந் தன் இனமாகக்கொண்டு மாறுதற் பொருட்டேயாம். தகுதி அதுவெனப்படுவது என்னும் பொருண்மைத்தாகலின் அவற்றோடொக்கும், நோக்கென்பதூஉம் அவ்வாறே இனமாக்கி நோக்குதற்பொருட்டு. இவ்வாற்றான் இரண்டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன்:--ஓதிய வாய்பாடு எண்ணான்கற்கும் இன்ன வாய்பாடும் இன்ன வாய்பாடும் ஒரு பொருளவென்று அறிதலுந் தத்தம் மரபிற் பொருள் தோன்ற வருமென்பதும் இடைச்சொல்லென்றலும், ஒப்பில் வழியாற் பொருள்செய்யினும் 5இசைச்சொல்லாகா; 6தெரிநிலை வினை உருபாயினும் என்பதறிவித்தலுமெனக் கொள்க. மேல் வருகின்றனவற்றிற்கும் இஃதொக்குமென்பது. இனிப், பயவுவமை வாய்பாடு எட்டனுள்ளும் எள்ளபொருவ கள்ள வெல்ல என்னும் நான்கும் உவமத்தினை யிழித்தற் பொருளவாகி ஒன்றாயடங்கும்; என்னை? மழையைப் பொரீஇச் சொல்லுதலும் அதனது தன்மைக்குணங் கொள்ளப்
1. விறத்தன் முதலிய நான்கும் ஒரு பொருள் என்பதை விறத்தல் இனமாகச் செறிதல் என்று தொடங்கும் வாக்கியங்களானுணர்க. 2. ஒரு பொருளாக--ஓரினமாக என்றிருப்பது நலம். 3. ஆதலின் என்றிருப்பது நலம். 4. இவ்வாக்கியம் வேண்டியதில்லை. 5. இசை--இடை என்றிருத்தல்வேண்டும். 6. தெரிநிலைவினை உவமஉருபாயினும் என்று பாடமுள்ளது. அதுவே பொருத்தம். தெரிநிலைவினைஉவமஉருபாயினும் ஒப்பில்வழியாற் பொருள் செய்யினும் இடைச்சொல்லாகா என்றபடி. இடைச்சொல்லாகா என்பது பின்வரல்வேண்டும். இவ்வாக்கியங்களில் பல ஏடெழுதுவோரால் மாறியும் திருத்தியும் எழுதப்பட்டன. |