பக்கம் எண் :

146உவமவியல்

1இவற்றுட் பலவற்றையுஞ் செயவெனெச்ச வாய்பாட்டால் ஓதியது என்னையெனின் அஃது, ‘உடம்பொடு புணர்த்தல்’ (665) என்பதனான் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் வினைச்சொற்போல நிற்குமெனவும், அவையுந் தெரிநிலைவினை யுவமையாய் வருமெனவும் அறிவித்தற்கென்க. 2இவற்றை இவ்வாறு எட்டாகச் சொல்லுதல் பெரிதும் நுண்ணுணர்விற்றென வுணர்க.

(18)

[மெய்ப்பாடு எட்டன்வழிப் பெருமையும் சிறுமையுந்
தோன்றுமெனல்]

294.பெருமையுஞ் சிறுமையு மெய்ப்பா டெட்டன்
வழிமருங் கறியத் தோன்று மென்ப.

இது, மேற்கூறிய உவமை இன்னுமொருவாற்றான் எட்டெனப்படுமென்பது உணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : பெருமைபற்றியுஞ் சிறுமைபற்றியும் ஒப்புமை கொள்ளப்படும் உவமை மேற்கூறிய மெய்ப்பாடெட்டன்வழித் தோன்றுமென்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

மெய்ப்பாடு எட்டென்பன:--

“நகையே யழுகை யிளிவரன் மருட்கை
 யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை”

(தொ. மெய். 5)

என மெய்ப்பாட்டியலுண் மேற்கூறப்பட்டன.

“களவுடம் படுநரிற் கவிழ்ந்து நிலங்கிளையா”

(அகம் 16)

என்பது, நகையுவமம்; என்னை? தலைமகனைக் கண்டறியாதாள் போலக் கரந்தொழுகுகின்ற பரத்தை அவனோடு ஒப்புமை


1. இளம்பூரணரும் பல்குறிப்பின என்றதனால் இச்சொற்கள் பெயரெச்ச நீர்மையவாய் வருவனவும், வினையெச்ச நீர்மையவாய் வருவனவும், முற்று நீர்மையவாய் வருவனவும், இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் உள எனக் கொள்க. புலிபோன்ற சாத்தன், புலிபோலுஞ் சாத்தன் என்பன பெயரெச்சம். புலிபோன்று வந்தான், புலிபோலப் பாய்ந்தான் என்பன வினையெச்சம். புலிபோலும் புலிபோன்றனன் முற்று. அன்ன இன்ன இடைச்சொல் என இச்சூத்திர உரையுட் கூறுதல் காண்க.

2. இச்சூத்திரத்திற்கு எட்டாகும் பகுதியுமுள என்று பொருள்கொண்டு சிறப்புச்சூத்திர நான்கனுள்ளுங் கூறிய 32-ம் எட்டாகும் என்று பொருள் கூறின் நலம். பேராசிரியர் கருத்தெல்லாம் இவற்றுளடங்கும்.