உவமையும் மெய்ப்பாடும் பொருள்களை அறிவிப்பனவாகி அவை வேறு வேறு பொருள் அறிவித்தலின் 1ஒத்து வேறுடையனவாயினும் சிறுபான்மை மயங்கியும் வருமென்றற்கு இது கூறவேண்டியதென்பது. (19) [உவமையானே உவமேயப் பொருட்கேற்றன அறிந்து துணியப்படுவனவு முளவெனல்] | 295. | உவமப் பொருளி னுற்ற துணருந் தெளிமருங் குளவே திறத்திய லான |
இஃது, எய்தாததெய்துவித்த னுதலிற்று. உவமையோடு பொருள் 2ஒவ்வாதெனவும் ஒப்புமை சார்த்திக்கொள்ளுமாறுணர்த்தினமையின். இ--ள் : உவமப் பொருளின்--உவமையெனப்பட்ட பொருளான்; இன் உருபு ஆன் உருபின்கண் வந்தது; உற்றதுணருந் தெளிமருங்குள--உவமிக்க வரும் பொருட்குற்றதெல்லாம் அறிந்து துணியும் பகுதியுமுள; திறத்தியலான--அங்ஙனந் துணியப்படும் பொருட்டிறம் பலவாகி வரும் இலக்கண வகையான் என்றவாறு. 3அப்பகுதி பலவும் உற்றுணராமற் சொல்லியவழியும் அஃது, உணர வருமென்பது கருத்து. திறத்தியல் எனப்பட்ட பகுதியாவன,--மேற் கூறப்பட்ட மெய்ப்பாடெட்டும்பற்றி உவமங் கொள்ளுங்கால் 4‘உற்றதுணருந் தெளிமருங்கென’ உவமானவடைக்கு உவமேயவடை குறைந்து வருவனவும், யாதும் அடையின்றி வருவனவுமென்று இவ்விரண்டும் உற்றுணராமற் சொல்லியவழி, அவற்றுக்கும் உவமைப் பொருளே தெளிமருங்காமெனவும்5வாளாதே உவமஞ்செய்து உற்றதுணர்த்தாதவழியும் 6அதுவே தெளிமருங்கா மெனவும் இன்னோரன்ன கொள்க.
1. ஒத்து--ஓத்து என்றிருத்தல்வேண்டும். ஓத்து--இயல். 2. ஒவ்வாதனவும் என்றிருப்பது நலம். 3. அப்பகுதி--உவமிக்கப்படும் பொருட்பகுதி. 4. உற்றதுணருந் தெளிமருங்கெனவே என்றிருத்தல்வேண்டும். இவ்வாக்கியம் இல்லாமலுமிருக்கலாம். 5. வாளாது--அடையின்றி. 6. அது--வாளா கூறியது. |