இஃது, இரண்டாம் மெய்ப்பாடுணர்த்துதல் நுதலிற்று என்னை? உள்ளத்துச் சிதைவறிந்த வழியன்றித் தலைமகளிடைத் தலைமகன் சென்று கையுங் காலும் மெய்யுறத்தீண்டிக் கண்ணுறா னாகலின், அங்ஙனஞ் சிதைவு பிறந்தது எழுவாயாகப் பின்னர்த் தலைமகன் மெய்யுற்றவழி நிகழ்ந்த உள்ளநிகழ்ச்சியை இரண்டாவதென்றானென்பது. இ-ள் : கூழை விரித்தன் முதலாகிய நான்கும் முறையானே இரண்டாவதெனப்படும் என்றவாறு. இவற்றுக்குத் 1தலைமகன் ஏதுவாவதல்லது இவைதாம் அவற்கு நிகழாவென்பது. கூழைவிரித்தலென்பது, மெய்யு மெய்யுந் தீண்டியவழி மெல்லியன் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுண் முதற்கண்ண தெனப்படும்; என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறுபாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறையுடையளாதலாற் கரந் தொழுகுதற்பாலளே; அங்ஙனங் கரக்குங்கால் தன்வயத்ததாகிய உடம்புபற்றிவரும் வேறுபாட்டினைத் 2தாங்கும்; அங்ஙனந் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையவாகி வேறுபட்ட தலைமயிரினது முடி உள்ள நெகிழ்ச்சியானே தன்வயத்ததன்றி ஞெகிழும்; ஆகலின் இது முற்கூறப்பட்டது. 3பிறசுவைபற்றியும் உலகினுண் மயிர்க்குவந்த வேறுபாட்டினைக் கூறுப; என்னை? ஒன்றன் மதுரச்சுவைக்கு அதிசயங் கூறுவார் மயிரினைச் 4செவ்வனின்றனவென்பது5போலக் கொள்க. அக்கூழை
1. தலைமகன் ஏதுவாவதல்லது என்பதே பொருத்தமான பாடம். கனகசபாபதிப்பிள்ளை பதிப்பிலுள்ள தலைமகள் என்பது பொருந்தாது. அவட்கு என்பதும் பொருந்தாது என்னை? தலைவிகண் கூழைவிரித்தல் முதலியன நிகழ்தற்குத் தலைமகன் காரணமாவதன்றி இவை அவன்கண் நிகழா என்பது கருத்தாகலின். இக்கருத்தே பொருத்தமென்பதைப் பதினைந்தாஞ் சூத்திர விரிவுரைநோக்கி அறிக. 2. தாங்கும்--அடக்கும், மறைக்கும். 3. பிறசுவை என்றது மதுரச்சுவையை. 4. செவ்வனிற்றல்--நேர்நிற்றல். 5. போலக் கொள்க என்பதை. போல இதனையுங் கொள்க என விரித்துக்கொள்க. யாழிசை முதலிய மதுரச் சுவைபற்றி உடம்பு குற்சிதங்கொள்ளும். அதனால் மயிர் நேர்நிற்குமென்க. இதனை இக்காலத்து மயிர்க்கூச்செறிதல் என்ப. |