1விரித்தற்கு ஏதுவாயினாள் இவளாகலின், அதனைச் சினைவினையானன்றி முதல்வினையாற் கூறினானென்பது. காதொன்று களைதலென்பது, உறுப்பிடைப் பூட்டுறப் புனையாது 2பெய்து வைத்தனவாதலால், தோடு முதலாயின எளிதின் வீழ்வனவாயின; 3மற்று 4அவை வீழ்தற்கு ஏதுவாய நெகிழ்ச்சி நிரம்பத்தோன்றாது இடைநிகர்த்ததாதலின் ஒன்று நிற்ப வொன்று வீழ்தலென்றா னென்பது. இது கூழைபோலாது, 5ஊறுணர்வுடைய உறுப்பாகலிற் காதின் வேறுபாட்டினைக் கூழை வேறுபாட்டின்பின் வைத்தான்; என்னை? கூழையிற் காது தனக்கு 6உறவுடைமையின். ஊழணிதைவரலென்பது, அக் 7கூழையுந் 8தோடும் போலப் பெய்யப்படு முறைமையவாகிய வளைகளை முன்கைமேல் இறுகச் செறித்தலும் 9விரற்செறியினைத் திருத்தலும் முதலாயின. இவை தோடுபோலச் 10செறிவில்லன அன்மையின் அவற்றுப் பின்வைத்தான். உடைபெயர்த் துடுத்தலென்பது, உடுத்த உடையினைப் பலகாலும் அழித்துத்தல்; அது கழறொடிபோலாது செறிவுடைமையின் அவ்வுடை நெகிழ்ச்சியைத் தொடி நெகிழ்ச்சிக்குப்பின் வைத்தானென்பது; மற்று, “தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே.” (குறு-239) எனப் பிரிவின்கண் வந்த வேறுபாட்டினை ஈண்டுக் கூறாரோ வெனின், அவை இன்னதன்பின்னர் இன்னது தோன்று
1. விரித்தல் என்பது விரிதல் என்றிருத்தல் வேண்டும். விரிதல்--சினைவினை. விரித்தல்--முதல்வினை. 2. பெய்துவைத்தல்--இட்டுவைத்தல். 3. மற்று அசை. 4. அவை--அத்தோடு முதலியவை. நிரம்பத் தோன்றாமையின் ஒன்று வீழ்ந்தது என முடிக்க. 5. ஊறு--பரிசம். 6. உறவு--பரிச உணர்ச்சியின் மிகுதியாலான தொடர்பு. 7. கூழை--பெய்துகட்டுவது; சொருகிக்கட்டுவது என்றபடி. 8. தோடு--காதிற் பெய்வது. அதுபற்றியே போலப் பெய்யப்படுமென்றார். 9. விரற்செறி--மோதிரம். 10. செறிவில்லன அன்மையின் எனவே. அதினுஞ் செறிவுடையன என்றபடி. |