யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தப வுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல்--அங்ஙனம் அறிமடங் கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக் கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும். கொடுப்பவை கோடல்--தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுந் தாருங் கண்ணியுந் தோண்மாலையு முதலாயின் கொண்டு கையுறை பாராட்டுதலும்; உளப்படத் தொகைஇ எடுத்த நான்கே நான்கென மொழிப--கொடுப்பவை கோடலகப்படத் தொகுத்தோதிய நான்கும் நான்காவது என்றவாறு. ‘எடுத்த’ என்றதனாற் கொடுப்பவை கொள்ளாது 1மறுத்தன் முதலியனவுங் கொள்க. புணர்ச்சிப்பின்னரல்லது பாராட்டுள்ளம் பிறவாமையானும் அதன்பின்னரல்லது பிறரொடு கூற்று நிகழாமையானும், அக்கூற்றுக்கேட்டல்லது தமரான் 2ஈரமில் கூற்றங் கோடலின்மை யானும், அவையெல்லாம் முடிந்தவழித் தலைவன்மேற் சென்ற உள்ளத்தாற் கொடுப்பவை கோடற்குறிப்பினளா மாகலானும் அம்முறையான் வைத்தானென்பது. இவற்றுக்குச் செய்யுள், “ஒருநாள் வந்து பலநாள் வருத்து நின்னையே போலுநின் றழையே யென்வயி னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும் யாயெதிர் கழறலிற் பேரலர் நாணியு மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு நோய்செய் தன்றாற் றானே நீதொடக் கரிதலி னோரிடத் தானே.” (இ. வி .ப. 533) இது கையுறை மறுத்தது; இதனுள் ‘நிற்பாராட்டி’ என்பது பாராட்டெடுத்தல், 3‘சொற்கொளலின்றி’ என்பது மடந்தப வுரைத்தல்; என்னை? கொளுத்தக்கொள்ளாதுவிடின் அது
1. கையுறை மறுத்தன் முதலியன. 2. ஈரமில் கூற்றம்--அன்பில்லா மொழி. 3. சொற்கொளலின்றி--தோழி தன்சொல்லைத் தலைவி கொள்ளுதலின்றி யென்றமையினாலே. தன் மடமை நீங்கத் தலைவி சிலசொற் கூறினாளென்பது பெறப்படும். அதனால் மடந்தப உரைத்தலாயிற்று. |