மடனாகாமையின். ‘யாயெதிர் கழறலிற் பேரலர் நாணி’ என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல்;1‘துயர்மருந்தாயினும்’ என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப்பட்டவழிக் கரிந்து காட்டி நின் மெய் வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் 2பின்னொருகாலத்து மறுத்தாளென்பது. (16) [ஐந்தாம்பகுதி இத்துணையது எனல்] | 265. | தெரிந்துடம் படுத றிளைப்புவினை மறுத்தல் கரந்திடத் தொழிதல் கண்டவழி யுவத்தலொடு பொருந்திய நான்கே யைந்தென மொழிப. |
இஃது, ஐந்தாங்காலத்து மெய்ப்பாடுணர்த்துகின்றது. இ-ள் : மேற்கூறிய கொடுப்பவை கோடல் நிகழ்ந்தவழி அவ்வொழுகலாறு புறத்தார்க்கெல்லாம் ஐயமாகலின் அதன் வழித் தோன்றுவது தெரிந்துடம்படுதலென்றானென்பது. தெரிந்துடம்படுதல்--3தலைமகனைத் தலைமகள் இவ்வொழுகலாறு நிகழ்ந்தவாற்றைப் 4பட்டாங்குணராதார் 5தலைமை செய்தன ளிவளெனவுந், தகாத வொழுக்கின ளிவளெனவும் பல்லாற்றானும் இவள்கண்ணே 6ஏதமிட்டுத்7துணிந்துந் துணியாதும் உரைப்பாராகலான் அதற்கு நாணி, இனி யாதுகொல்லோ செயற்பாலதென்று ஆராய்ந்து, இவ்வொழுகலாற்றினை அறிவிப்பேங்கொல் அறிவியேங்கொல்லெனத் தடுமாறிப், பின்னொருவகையான் ஆராய்ந்து முழுவதூஉஞ் சொல்லாது தன் குலத்திற்கும் ஒழுக்கத்திற்கும் பெண்டன்மைக்கும் ஏற்றவகையான் வேண்டு
1. துயர் மருந்தென்றதனால் அவள் கொள்ளத்தக்கது என்பது பெறப்படும். 2. பின்னொருகாலத்து மறுத்தாள் என்பது பின்னொருகால் அதனை மறுத்தாள் என்றிருப்பது நலம். 3. தலைமகனொடு என்றும் பாடமுளது. அதுவே பொருத்தம். தலைமகள் என்பதும் தலைமகளிடை என்றிருத்தல் வேண்டும். 4. பட்டாங்கு--உண்மை. 5. தலைமைசெய்தல்--தன்னெண்ணங்கொண்டு நடத்தல். 6. ஏதமிட்டு--குற்றமேற்றி. 7. துணிந்தும் துணியாதும்: அவள் ஏதத்தை (களவினை)த் துணிந்தும் துணியாதும். |