வன தெரிந்துகொண்டு, இன்னவாறு 1பட்டதென்று தோழிக்கு உடம்படுதலுந் தோழியாற் செவிலிக்கு உடம்படுதலுமென இன்னோரன்ன 2குறிப்பினைத் தெரிந்து உடன்படுதலும். திளைப்புவினை மறுத்தல்--அங்ஙனம், தமர்க்குத் தானுடம் பட்டதன்பின்னர்த் தலைமகனோடு பகலு மிரவும் பண்டு திளைத்தவாறு திளைத்தலை அச்சமு நாணு மடனுங் காரணமாக மறுத்தலும்; உடம்பாட்டின் பின்னர் மறுக்குமாதலின் அதனைத் 3திளைப்புவினை மறுத்தலென்று இரண்டாவது வைத்தானென்பது. கரந்திடத்தொழிதல்--அக்காலத்து இற்செறிக்கப்படுதலால் தான் அவனை மறுத்த ஏதத்திற்கு நாணியும் அஞ்சியும் அவற்கு வெளிப்படாதொழுகுதலை உடையளாதலும்: 4தன்னிடத்தே தங்குதலை ‘இடத்தொழிதல்’ என்றான். கண்டவழியுவத்தல்--அங்ஙனம் கரந்தொழுகும் காலத்து அவனை ஒரு 5ஞான்று கண்டவழிக் கழியுவகைமீதூர்தலும். இது தலைமகற்கும் உரித்து. 6பொருந்திய நான்கே ஐந்தென மொழிப--இவை நான்கும் ஐந்தாங் கூறெனப்படும் என்றவாறு. ‘பொருந்திய நான்கு’ என்றது, இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடையவென்பது. இதனானே இவை 7நந்
1. பட்டது--நிகழ்ந்தது. 2. குறிப்பு-சொல்லவேண்டிய குறிப்பு. தெரிந்து-ஆராய்ந்து. உடன்படல்-அறத்தொடு நிற்றல். 3. திளைப்புவினை--கூட்டம். 4. தன் இடம்--தனக்குரிய இடம். 5. ஞான்று--நாள். 6. பொருந்திய நான்கு--தம்முட்டாம் இயைபுடைய நான்கு. இடையறவு--இடைவிடல். ஒவ்வொரு கூறாகச் செய்யப்பட்ட நந்நான்கும் தம்முட்டா மியைபுடைய என்பான் பொருந்திய நான்கென்றான் என்பது பொருந்திய நான்கு என்பது சிங்க நோக்காக முன்னும் பின்னும் இயையுமென்க. 7. இவை நந்நான்கு என்றது முற்கூறிய நான்கன் கூட்டங்களையுஞ் சேர்த்துக் கூறியதாகும். |