பக்கம் எண் :

52மெய்ப்பாட்டியல்

என்றமையாற் கண்ணின் வேறுபாடுளவாமன்றே, அவை சிதைவு பிறர்க்கறிவிக்குமாயினும் ஆண்டுத் தானது மறைத்தாளென்னுங் கருத்தினளாகலின் அதுவுஞ் சிதைவு பிறர்க்கின்மையாமென்பது; அவை யாவையெனின்,1அமர்த்து நோக்காது அலமா நோக்குதலும் 2நிலங் கிளைத்தலும் போல்வன.

மற்றுப் பொறிநுதல் வியர்த்தற்குப் புறனடையாற் கொள்வன யாவையெனின்,--புறனடையாற் கோடல் 3ஆணையன்றாகலான்4உள்ளனவற்றிற்குக் கொண்டொழிக வென்றவாறு. ஒழிந்தனவற்றிற்கும் இவ்வாறே வருவன அறிந்து அடக்கங் கூறுக.

மற்றும், ‘பிறவு மவற்றொடு சிவணி’ எனவே, மேற்கூறியவற்றொடு பொருந்த வருவன கோடுமன்றே? ‘அன்ன’ என்ற தென்னையெனின்; அதனானே தலைமகற்குரிய மெய்ப்பாடு வேறுளவாயினுங் கொள்க. அவை 5ஐயப்படுதலும் ஆராய்தலுந் துணிதலு முதலாயின.

மற்றுத் தலைமகட்குரிய மெய்ப்பாடுபோலத் தலைமகற்குரியனவும் இன்னமுறையனவென்று வரையறுத்துக் கூறாரோவெனின்; அற்றன்று; தலைமகன் குறிப்புச் சிலபற்றித் தலைமகள் குறிப்புப் பல பிறக்குமாகலானும் ஐய முதலாயின மெய்ப்பாடு காமப் புணர்ச்சிக்கு இன்றியமையாதன அன்மையானுந் தலைமகட்குரிய மெய்ப்பாடே சிறந்தனவென்று அவற்றை வரை


1. அமர்த்து நோக்கல்--விரும்பி நோக்கல், மாறுபடநோக்கல். கண்டாருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்--பேதைக் கமர்த்தன கண் (குறள்-1084) என்பத னுரை நோக்குக.

2. நிலங்கிளைத்தல்--காற் பெருவிரலால் நிலத்தைக் கிளைத்தல். கிளைத்தல்--தோண்டுதல்; கீறலுமாம்.

3. ஆணை--ஆசிரியன் கட்டளை.

4. உள்ளனவற்றிற்குக் கொண்டு எனவே, இல்லாதனவற்றிற்குக் கொள்ளவேண்டுவதில்லை என்றபடி. பொறிநுதல் வியர்த்தற்கண் அடங்குவன இல்லை. ஆதலால் உள்ளவற்றிற்கே கொள்க என்பது கருத்து.

5. ஐயம்--தலைமகளை ஐயஞ்செய்தல். ஐயம் முதலிய மூன்றும் கந்தருவ மணத்தின் முன் னிகழும் காட்சிக்குப் பின் னிகழ்வன.