“மாணமறந் துள்ளா நாணிலிக் கிப்போர் 3புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே யுறழ்ந்திவனைப் பொய்ப்ப விடேஎ மெனநெருங்கிற் றப்பினே னென்றடி சேர்தலு முண்டு.” (கலி. 89) இதனுட், சிதைவு பிறர்க்கின்மை வந்தவாறு; ஒழிந்தனவும் அன்ன. 2”நோய்சேர்ந்த திறம்பண்ணி நின்பாண னெம்மனை நீசேர்ந்த வில்வினாய் வாராமற் பெறுகற்பின்.” (கலி. 77) என்பது, 3மடந்தபவுரைத்தல். இவையெல்லாங் கற்பின்கண் வந்தன. “அன்னை சொல்லு முய்க மென்னதூஉ மீரஞ்சேரா வியல்பிற் பொய்ம்மொழிச் சேரியம் பெண்டிர் கௌவையு மொழிகம்.” (அகம். 65) என்பதோவெனின், அது 4’பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல்’ (264) என்புழி அடங்குமென்பது. (19) [மேற்கூறிய நிமித்தங்களின்றியும் புணர்ச்சி நிகழும் எனல்] | 268. | வினையுயிர் மெலிவிடத் தின்மையு முரித்தே. |
இது, மேலனவற்றுக்கே ஆவதோர் விதி கூறுகின்றது. இ-ள் : ‘மன்னிய வினைய’ (267) எனப்பட்ட புணர்ச்சி மேல் அறுவகையான் இருபத்துநான்கெனக் கூறப்பட்ட மெய்ப்
1. புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே என்பது சிதைவு பிறர்க்கின்மை. என்னை? தன் நெஞ்சிற்குச் சொல்லினமையின். 2. நோய் சேர்ந்த திறம்--நோவு சேர்ந்த திறம் என்பது நச்சினார்க்கினியருரை. நோதிறம் என்று பரிபாடலும் சிலப்பதிகாரமும் கூறுகின்றன. சிலப்பதிகார உரையாசிரியர் நொந்த திறம் என்பர். சிலர் நோ திறம் வேறு, நோய் திறம் வேறு என்பர். ஆராய்ந்துணர்க. நோதிறம், பாலைப்பண் ஐந்தனுளொன்று. அது,--“தக்கராகம் நோதிறம் காந்தாரம் பஞ்சமமே, துக்கங் கழிசோம ராகமே--மிக்கதிறற். காந்தார மென்றைந்தும் பாலைத் திறமென்றார், பூந்தா ரகத்தியனார் போந்து” என்பதனாலறியப்படும். 3. பெண்களுக்குரிய மடமை தீர்ந்து அறிவொடு கூடிச் சொன்னதனால் மடந்தப வுரைத்தலாயிற்று. 4. தலைவி உடன்போவதைப் பாராட்டியதனால் பாராட் டெடுத்தலுள்ளும், உய்கம் ஒழிகம் என்றதனால் மடந்தப வுரைத்தலுள்ளும் அடங்கும் என்க. |