பக்கம் எண் :

பொருளதிகாரம்55

பாட்டினை அம்முறையானே நிமித்தமாகக் கொண்டு வருதலின்மையும் உரித்தெனப்படும்; ஆற்றாமை வந்தவிடத்து என்றவாறு.

மேற்கூறிய இருபத்துநான்கினையின்மை உரித்தென்பது 1அதிகாரத்தாற் கொள்க.

“தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப
 வின்னுயிர் குழைய 2முயங்குதொறு மெய்ம்மலிந்து
 நக்கென னல்லனோ யானே யெய்த்த
 நோய்தணி காதலர் வரவீண்
 டேதில் வேலற் குலந்தமை கண்டே.”

(81. 22)

“வனைந்துவர லிளமுலை ஞெழுங்கப் பல்லூழ்
 விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
 நின்மார் படைதலி னினிதா கின்றே.”

(அகம். 58)

என இவை, களவியலுள் (111) உயிர்மெலிந்தவிடத்துப் புணர்ச்சி நிமித்தமெனக் கூறப்பட்டவையின்றியும் புணர்ச்சி நிகழ்ந்தவாறு; என்னை? முயங்குதொறு நகைதோன்றிற்றெனவே, பாராட்டெடுத்தன் முதலாயினவின்றியும் புணர்ச்சி நிகழ்ந்ததாம். ஒழிந்தனவும் அவ்வாறே கொள்க. இவை கண்டவழி யுவத்த லாகாவோவெனின், ஆண்டுத் தன்னுவகை கூறாளன்றே 3கரந்திடத் தொழிந்தாளாகலினென்பது.

“தண்டுளிக் கேற்ற பலவுழு செஞ்செய்
 மண்போன் ஞெகிழ்ந்தவற் கலுழ்ந்தே
 நெஞ்சறை போகிய வறிவி னேற்கே.”

(அகம். 26)

என்புழி, பாராட்டெடுத்தன் முதலாகிய பன்னிரண்டு நிமித்தமுமின்றி ஆற்றாமை 4நிமித்தமாகக் கற்பினுட் புணர்ச்சி நிகழ்ந்தது. உம்மை எதிர்மறை. உயிர் மெலிவிடத்து உடைமை யுடைத்துமாம் அவ்வினையென்பது.

“5தொடிஞெகிழ்ந் தனவே தோள்சா யினவே.”

(குறு. 239)


1. மேற்கூறிய 24 மெய்ப்பாடும் அதிகாரப்பட்டு நின்றமையின் இன்மையுமுரித்து என்பதற்கு அவை செயப்படுபொருளாக வருவிக்கப்படும் என்பது கருத்து.

2. முயங்குதொறு நகை தோன்றிற்றெனவே முன் னுயிர் மெலிவாகிய ஆற்றாமை யுடையளாயினாள் என்பது பெறப்படும். நோய் தணி காதலர் என்பதனானும் அது பெறப்படும்.

3. அவன் காணாதவிடத்திருத்தலின் ஆண்டு உவகை கொள்வதன்றிக் கூறாள் என்பது கருத்து.

4. நிமித்தம்--காரணம்.

5. தொடி நெகிழ்ந்தன என்பது ஊழணி தைவரல்.