என்பதனுள், ஊழணிதைவரலென்னும் மெய்ப்பாடு வந்தது, பிறவும் அன்ன. இனி மேற்கூறிய ஆறுமேயன்றி இன்னும் இவற்றொடு நான்கு கூட்டிப் 1பத்தென்பாருமுளர்; அவை 2இன்பமாதற்குரியன வன்மையின், வரையறைகூறாதொழிந்தானென்பது. (20) [புணர்ச்சிக்கு நிமித்தமான வேறும் மெய்ப்பாடுகள் உள எனல்] | 269. | 3இவையு முளவே யவையலங் கடையே |
இஃது எதிரது போற்றி இறந்தது காத்தது. இ-ள் : இவையுமுளவே--எதிர்வருகின்றனவும் உளவாவது, அவையலங்கடையே--இறந்தனவற்றுக்கு இடனல்லாதவிடத்தே என்றவாறு. இதனது கருத்து: மேற்கூறிய இருபத்துநான்குமல்லாத வழி இன்பத்தை வெறுத்தன் (270) முதலாக இனிக் கூறுகின்ற மெய்ப்பாடும் உளவாம் என்றவாறு. அவையல்லாதவிடத்து இவையும் உளவாமெனவே, வருகின்ற மெய்ப்பாடுங் களவிற்குங் கற்பிற்கு முரியவெனவும், களவிற்கு வருங்கான்
1. பத்துக்கூறு இவை என்பதை இளம்பூரணருரையில் 262-ம் சூத்திர உரை நோக்கியறிக. 2. இன்பமாதற்குரிய வன்மையின்--நடுவணைந்திணைக்குரிய வன்மையின். 3. அவையும் என்னும் பாடம் இவையுமென்றிருப்பதே பொருத்தம். ‘அவையல்லாதவிடத்து இவையுமுள’ எனப் பின்வரு முரையையு நோக்குக. ‘அவையு முளவே யவையலங் கடையே’ என்பது இளம்பூரணர் தம்முரைக்கேற்பக் கொண்ட பாடம். அவர் இதற்குக் கொண்ட வுரையாவது:- அவையலங் கடை--நடுவணைந்திணையல்லாத கைக்கிளைப் பொருட்கண்--அவையுமுள--மேற்சொல்லப்பட்ட புகுமுகம் புரிதன் முதலாயினவுமுள என்பது. இவ்வுரையில். அவை என்றது மேற்கூறிய மெய்ப்பாடுகளைக் குறிக்கின்றது. பேராசிரியருரையில் அவை மேல்வருஞ் சூத்திரப்பொருளைச் சுட்டுவதாகக் கொள்ளவேண்டும். மேல் வருவனவற்றை அவை என்று சுட்டல் வழக்காறன்மையின் இவை என்ற பாடமே பொருத்தம் என்க. இவை என்பது அவை என வேறுபாடுணராதோரால் திருத்தி எழுதப்பட்டது. |