முதற்கூறிய இருபத்துநான்கின் பின்னுமே இவை பெரும்பான்மையான் வருமெனவும், கற்பிற்காயிற் பயின்று வருமெனவுங் கூறியவாறு. அவை இனிக் கூறுகின்றான். (21) [களவுக்குங் கற்பிற்குமுரிய மெய்ப்பாடுகள்] | 270. | இன்பத்தை வெறுத்த றுன்பத்துப் புலம்ப லெதிர்பெய்து பரித லேத மாய்தல் பசியட நிற்றல் பசலை பாய்த லுண்டியிற் குறைத லுடம்புநனி சுருங்கல் கண்டுயின் மறுத்தல் கனவொடு மயங்கல் பொய்யாக் கோடன் மெய்யே யென்ற லையஞ் செய்த லவன்றம ருவத்த லறனளித் துரைத்த லாங்குநெஞ் சழித லெம்மெய் யாயினு மொப்புமை கோட லொப்புவழி யுவத்த லுறுபெயர் கேட்ட னலத்தக நாடிற் கலக்கமு மதுவே. |
இது, மேல் ‘இவையுமுள’ (269) எனப்பட்ட மெய்ப்பாடு கூறுகின்றது. இ-ள் : எண்ணப்பட்ட இருபதும் ‘மன்னிய வினைய நிமித்தம்’ (217) என்பான் 1‘நலத்தகநாடின் அதுவே’ ‘யாமென்றானென்பது. இவை புணர்ச்சிக்கு நிமித்தமாகாதனபோன்று காட்டினும் அவற்றை மிகவும் ஆராய்ந்துணரிற் புணர்ச்சிநிமித்தமேயாம் என்றவாறு. இன்பத்தை வெறுத்தலென்பது, யாழுங் குழலும் பூவுஞ் சாந்தும் முதலாக இன்பத்திற்கேதுவாகிய பொருள் கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். 2அவை காமத்திற்கு ஒருவகையான் ஏதுவாகலின் ‘மன்னிய வினைய நிமித்தம்’ (267) எனப்படுமாகலான் அவற்றை வெறுத்தல் புணர்ச்சிக் கேதுவாகாதன்றேயாயினும் அதனை ஆராய்ந்துணரின் நிமித்தமென வேண்டுமென்பான் ‘நலத்தக நாடி னதுவே’ என்றானென்
1. நலத்தகநாடல்--நன்மைதக ஆராய்தல். நன்றாக ஆராய்தல். 2. அவை--யாழ் குழன் முதலியன. இவை இன்பத்திற்கேதுவாய பொருள்கள். |