பது. ‘கலக்கமும்’ என நின்ற உம்மை மேற்கூறிய பத்தொன்பானையுந் தழுவலின் இறந்தது தழீஇயிற்றாம். “நின்வலித்த மைவென் மன்னோ வல்கற் புன்கண் மாலையொடு பொருந்திக் கொடுங்கோற் கல்லாக் கோவல ரூதும் வல்வாய்ச் சிறுகுழல் 1வருத்தாக் காலே.” (அகம். 74) என்புழி, இன்பத்தை வெறுத்தனளாயினும் புணர்ச்சிக் கேதுவா மென்பது கருத்து. “மனைசேர் பெண்ணை மடிவா யன்றி றுணையொன்று பிரியினுந் 2துஞ்சா காணெனக் கண்ணிறை நீர்கொண்டு 3கரக்கு மொண்ணுத லரிவையா னென்செய்கோ வெனவே.” அகம். 50) என்பதும் அது. துன்பத்துப் புலம்பல் என்பது பிரிவாற்றாது துன்புறுங் காலை அவ்வாற்றாமை தலைமகற்கின்றித் தானே துன்புறுகின்றாளாகச் சொல்லுதல். அவை கூட்டத்தை வெறுத்த குறிப்பாயினும் அக்கூட்டத்திற்கே நிமித்தமாகும் ஆராய்ந்துணரினென்றவாறு; அவை, “நின்னுறு விழுமங் களைந்தோ டன்னுறு விழும 4நீந்துமோ வெனவே.” அகம். (170) என வரும். எதிர்பெய்து பரிதலென்பது; உருவுவெளிப்பாடு; அது, தலைமகனையும் அவன் தேர் முதலாயினவற்றையுந் தன்னெதிர் பெய்துகொண்டு பரிந்து கையறுதல்; அது, “வாரா தாயினும் வருவது போலச் செவிமுத லிசைக்கு மரவமொடு துயின்மறந் தனவாற் றோழியென் கண்ணே.” (குறு. 301)
1. வருத்தாக்கால் நீ சொன்னவாற்றை நிச்சயித்திருப்பேன்; வருத்துவதால் அவ்வாறு இருக்கமாட்டேனாயினேன் என்றமையின் குழலை வெறுத்துக் கூறியதாயிற்று. ஆதலின் இன்பத்தை வெறுத்தலாம். 2. துஞ்சாகாணென என்றமையான் அன்றிலிசையை வெறுத்தமை தோன்றிற்று. அது காமத்தை மிகுத்தலான் பின் புணர்ச்சிக் கேதுவாதலுங் காண்க. 3. கரக்கும்--அழித்து மறைக்கும். 4. நீந்துமோ எனவே நீந்தமாட்டாமை பெறப்பட்டமையின் துன்பத்துப் புலம்பலாயிற்று. |