என்புழி, வாராதென்றுணர்ந்தது 1இக்காலத்தாகலான், அதற்கு முன் 2இன்னவாறு பட்டதன்று என்றமையின் எதிர்பெய்து பரிதலாயிற்று. ஏதமாய்தலென்பது, கூட்டத்திற்குவரும் இடையூறுண்டென்று பலவும் ஆராய்தல்; அது, 3நொதுமலர் வரையக் கருதுவர்கொல்லெனவும், பிரிந்தோர் மறந்து இனிவாரார்கொல்லெனவுந் தோன்றும் உள்ளநிகழ்ச்சி; அது, “வாரார் கொல்லெனப் 4பருவருந் தாரார் மார்பநீ தணத்த ஞான்றே.” (அகம் 150) என வரும். பசியடநிற்றலென்பது, பசி வருத்தவும் அதற்குத் தளராது உணவு மறுத்தல். “அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் 5பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி.” (அகம். 48) எனவும், “இனியான் 6உண்ணலு முண்ணேன் வாழலும் வாழேன்.” (கலி. 23) எனவும் வரும். பசலை பாய்தலென்பது, பசலை பரத்தல்; அது, “கன்று முண்ணாது கலத்தினும் படாது நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் கெனக்கு மாகா 7தென்னைக்கு முதவாது
1. இக்காலம்--வரவில்லையென்று உணர்ந்த இக்காலம் (விடியற்காலம்) என்க. பிற்காலத்தாகலான் எனவும் பாடம். அது நன்கு பொருந்தும். 2. இன்னவாறு பட்டதன்று -- இவ்வாறு வாராதென்று பட்டதன்று, வருவதுபோலவே பட்டது என்றபடி. 3. நொதுமலர்--அயலார். 4. பருவரல்--துன்பப்படல். 5. பழங்கண்--துன்பம். 6. உண்ணலுஞ் செய்யேன் வாழலுஞ் செய்யேன் என்பது பொருள். 7. என்னை--எனது தலைவன். |