பக்கம் எண் :

580செய்யுளியல்

[களவினிற் கூற்றுக்குரியார் இவர் எனல்]

501. பார்ப்பான் பாங்கன் றோழி செவிலி
சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோ
டளவியன் மரபி னறுவகை யோருங்
களவினிற் கிளவிக் குரிய ரென்ப.

இது, கூற்றென்னும் உறுப்புணர்த்துகின்றது.

இ--ள் :எண்ணப்பட்ட அறுவருங் களவொழுக்கினுள் (177) நிகழ்ந்தன கூறினாராகவல்லது ஒழிந்தோர், கூறினாராகச் செய்யுள் செய்யப்பெறாரென்றவாறு.

பார்ப்பானென்பான், நன்றுந் தீதும் ஆராய்ந்து உறுதி கூறுவானெனப்படும். பாங்கனென்பான், அவ்வாறன்றித் தலைமகன் வழிநின்றொழுகி வருமாகலின் அவனை அவன்பின் வைத்தான். தோழி, அவன்போன்றும் பெண்பாலாகலின் அவளைப் பின்வைத்தான். செவிலி மாற்றஞ் சிறுவரவிற்றாதலின் அவளை அவளின்பின் வைத்தான். அவரிற் சிறந்தமையிற் சீர்த்தகு சிறப்பிற் கிழவனையுங் கிழத்தியையும் அவர்பின் வைத்தான். அவ்விருவருள்ளுந் தலைமகளது கூற்றே பெருவரவினதாகலின் அவளை ஈற்றுக்கண் வைத்தானென்பது. உதாரணம்:

“சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே.”

(கலி. 9)

என்பது, பார்ப்பான் கூற்று.

“காமங் காம மென்ப காம
 மணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
 1முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புன்
 2மூதா தைவந் தாங்கு
 விருந்தே காமம் பெருந்தோ ளோயே.”

(குறுந். 204)

என்பது, பாங்கன் கூற்று.

“ஏனல் காவ லிவளு மல்லள்
 . . . . . . . . . . . . . . . . . . . . .
 சொல்லு மாடுப கண்ணி னானே.”

என்பது, தோழி கூற்று.


1. முதைச்சுவல் கலித்த--பழங் கொல்லையாகிய மேட்டு நிலத்தே தழைத்த.

2. மூதா--முதிய பசு.