“பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தன னென்றனள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ஆம்பன் மலரினுந் தான்றண் ணியளே.” (குறு. 84) என்பது, செவிலி கூற்று. “பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி.” (அகம். 48) என்பதும் அது. “கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.” (குறு. 280) என்பது, கிழவன் கூற்று. “விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற நின்மார் படைதலி னினிதா கின்றே.” (அகம். 58) என்பது, கிழத்தி கூற்று. பிறவும் அன்ன. (189) [கற்பினிற் கூற்றுக்குரியார் இவர் எனல்] | 502. | பாணன் கூத்தன் விறலி பரத்தை 1யாணஞ் சான்ற வறிவர் கண்டோர் பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத் தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர். |
இதுவுமது. இ--ள் : இவ்வெண்ணப்பட்ட எல்லாருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் என்றவாறு. ‘முன்னுறக் கிளந்த 2கிளவி’ என்பது, பொருணோக்கிற்று. இசையின் பின்னரது நாடகமாகலிற் பாணன்பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின் வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன்பின் வைத்தும், 3பொருட்குச் சிறந்தாராகலின் நற்
1. ஆணம்--அன்பு. 2. கிளவி--ஈண்டுப் பொருள் நோக்கிற்று என்றபடி. 3. பொருட்குச் சிறந்தார் என்றது, பொருள் பெறுதற்குச் சிறந்தவர் பரத்தைய ரென்றபடி. அறிவரும் பொருட்குச் சிறந்தாராகலின் அப்பொருட்குச் சிறந்த பரத்தையர்க்குப்பின் அவரை வைத்தாரென்பது கருத்து. அறிவரை நற்பொருளுணரும் அறிவர் என்றமையின். பரத்தையர் தீப்பொருளுணர்வோரென்பது பெறப்படும். எனினும் இருவரும் பொருள் என்ற அளவில் இயைபுடையார் என்றபடி. |