பக்கம் எண் :

582செய்யுளியல்

பொருள் உணரும் அறிவரை அவர்பின் வைத்தும், ஏதிலராகிய கண்டோரை அவர்க்குப்பின் வைத்துங் கூறினானென்பது. இவ்வாற்றான் இவரோடு முன்னர்க் களவொழுக்கத்திற் கூறிய அறுவருங் கூறப்பெறுவரென்றவாறு. ‘தொன்னெறி மரபின்’ என்றதனாற் பாகனுந் தூதனுங் கூறவும் அமையும்; அவை புறப்பொருட்குச் சிறந்துவரும்; அவற்றுக்குச் செய்யுள்:--

“செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக்
 கடவுள் வாழ்த்திப் 1பையுண் மெய்நிறுத்
 தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே.”

(அகம். 14)

என்பது, பாணன் கூற்று.

“ஆடலிற் பயின்றனை யென்னா தென்னுரை
 யூடலிற் றெளிதல் வேண்டும்.”

என்பது, கூத்தன் கூற்று.

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 நறுங்கண் ணியன்கொ னோகோ யானே.”

என்னும் நற்றிணைப் (394) பாட்டு, கண்டோர் கூற்று.

“விதையர் கொன்ற முதையற் பூழி
 . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
 மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே.”

என்னும் நற்றிணைப் (121) பாட்டுப் பாகன் கூற்று.

ஒழிந்தனவுங் கற்பியலுட் கூறியவாற்றான் அறிக.

(190)

[கூற்றுக்குரியரல்லாதார் இவர் எனல்]

503. ஊரு மயலுஞ் சேரி யோரு
நோய்மருங் கறிநருந் தந்தையுந் தன்னையுங்
கொண்டெடுத்து மொழியப் படுத லல்லது
கூற்றவ ணின்மை யாப்புறத் தோன்றும்.

இ--ள் : இவ்வெண்ணப்பட்ட அறுவகையோருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறார் என்றவாறு.

இவை, களவிற்கும் கற்பிற்கும் பொது. ‘கொண்டெடுத்து மொழியப்படுதல்லது’ என்பது, இவர் கூற்றாகப் பிறர் சொல்லினல்லது இவர்தாங் கூறாரென்றவாறு; அவை,

“ஊஉ ரலரெழச் சேரி கல்லென
 வானா தலைக்கு மறனி லன்னை.”

(குறுந். 262)

எனவும்,


1. பையுள்--துன்பம்.