“தெரிகணை நோக்கிச் சிலைநோக்கி . . . . . . . . . . . .சாய்த்தார் தலை.” (கலி. 39) எனவும் வருவனபோல்வன. ‘யாப்புறத் தோன்றும்’ என்றதனான் அகத்திணைக்கண் இவ்வாறு நிலைபெற்றதென்பது; எனவே, புறத்திணைக்கண் அவர் கூறவும்பெறு மென்பது. 1இது நோக்கிப்போலுங் 2கூறாதாரையுங் கூறுவாராயிற்றென்பது. ‘நோய்மருங்கறிநரை’ இடை வைத்தான், முன்னைய மூன்றும் பெண்பாலெனவும், ஒழிந்தன ஆண்பாலெனவும் அறிவித்தற்கென்பது. எனவே, 3நோய்மருங்கறிநர் பெண்பாலும் ஆண்பாலுமாயினாரென்பது. (191) [நற்றாய் தலைவனொடுந் தலைவியொடுங் கூறாள் எனல்] | 504. | கிழவன் றன்னொடுங் கிழத்தி தன்னொடு நற்றாய் கூறன் முற்றத் தோன்றாது. |
இஃது, எய்தாததெய்துவித்தது; விலக்கியல்வகையால் விதித்ததெனவும் அமையும். இ--ள் : கிழவனோடுங் கிழத்தியோடும் இடையிட்டு நற்றாய் கூறுதல் நிரம்பத் தோன்றாது என்றவாறு. ‘நற்றாய்’ என்று ஒருமை கூறியவதனால், தலைமகள் தாயையே கொள்ளப்படும். இதனானே தந்தை தன்னையரென்பன போல்வனவற்றுக்கும் இஃதொக்கும். ‘முற்ற’ என்றதனால் தானே தலைவனாதலால் தலைவன் தமர் யாவருங் கூறார்; 4முற்கூறப்பட்டார் 5அல்லரென்பது கொள்க. முற்றாதென்னாது ‘தோன்றாது’ என்றதனால், புறத்திணைக்கண் இவை வரைவின்றி வழக்கினொடு பொருந்துமாற்றாற் கொள்ளப்படுமென்பது. ‘கிழவன்றன்னொடுங் கிழத்திதன்னொடும் ‘கூறாள்’ எனவே, அல்லுழிச் சொல்லப்பெறும் நற்றாயென்பதாம்; அஃது,
1. இது--புறத்திணைக்கட் கூறல். 2. கூறாதார்--கூற்று நிகழ்த்தப்பெறாதார். அவர் இச்சூத்திரத்தாற் கூறியவர். கூறுவானாயிற்று என்றிருப்பது நலம். ஆசிரியனை ஆதலின். 3. நோய்மருங்கறிநர்--தலைவியின் நோயின் பகுதியைக் குறிப்பாலறிபவர். இளம்பூரணம் நோக்குக. 4. தலைவிதாய் முதலியோர். 5. அல்லரென்பது அல்லதென்பது என்று இருத்தல் வேண்டும். |