“எம்வெங் காம மியைவ தாயின் . . . . . . . . . . . . . . . . . . . . . செறிந்த சேரிச் செம்மன் மூதூ ரறிந்த மாக்கட் டாகுக தில்ல . . . . . . . . . . . . . . . . . . . . . மென்றோ ளஞ்ஞை சென்ற வாறே.” (அகம். 15) என வரும். (192) [இடைச்சுரத்துத் தலைவன் தலைவியொடு கண்டார் கூறுவர் எனல்] | 505. | ஒண்டொடி மாதர் கிழவன் கிழத்தியொடு கண்டோர் மொழிதல் கண்ட தென்ப. |
இ--ள் : தலைமகனோடும் தலைமகளோடும் இடைச்சுரத்துக் கண்டோர் மொழிதல் அறியப்பட்டது என்றவாறு. 1‘ஒண்டொடி மாதர் கிழவன்’ எனவே, அவ்விருவர் கூட்டத்துக்கண்ணுமன்றி அவ்விருவரோடுந் தனித்துழிக் கூற்றில்லை என்றவாறு. ‘கண்டது’ என்றமிகையான், இடைச்சுரத்துக் கண்டோர் செவிலிக்குரைப்பனவுங் கொள்க; அவை, “இளையண் மெல்லியண் மடந்தை யரிய சேய பெருங்கான் யாறே.” (சிற்றட்டகம்) எனவும், “அணித்தாத் தோன்றுவ தெம்மூர் மணித்தார் மார்ப சேர்ந்தனை சென்மே.” எனவும் வரும். இதனுள், ஒண்டொடி மாதர் கிழவன் எனச் செவ்வனந் தோன்றக் கூறியது 2தலைமகனையாதலின், “வில்லோன் காலன கழலே கொடியோண் மெல்லடி மேலன சிலம்பே.” (குறுந். 7) என்பது, செவிலிக்குக் கண்டோர் கூறியது. (193)
1. மாதர்க்குக் கிழவன் என்பது இவர் கருத்து. கிழவன்--உரியோன், மாதர் என்பது கிழவனை விசேடித்து நின்றதென்பது இவர் கருத்து. மாதர்--கிழத்தி. மாதர் என்பதற்குச் செவிலி என்று பொருள்கொள்வர் நச்சினார்க்கினியர். நற்றாய்--தோழி செவிலி என்பர் இளம்பூரணர். 2. தலைமகனையாதலின் என்பதன்பின் சில வாக்கியம் இருந்திருத்தல் வேண்டும். என்னை? தொடர்பின்றியிருத்தலின். |