பக்கம் எண் :

586செய்யுளியல்

[கண்டோரும் வழக்கியலாணையிற் கிளப்பரெனல்]

1507.ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு
மொழிந்தாங் குரியர் முன்னத்தி னெடுத்தே.

இதுவுங் கண்டோர் கூற்று.

இ--ள் : மேலைச் சூத்திரத்துக் கூறிய தலைமகனையும் தலை மகளையும் ஒழித்து, ஒழிந்தோரெனப்படுவார் கண்டோரெனப்படுப. அவர் கூற்றுங் கிழவன் கிழத்தியொடு மொழிந்தாங்கு வழக்கியலாணையிற் கிளத்தற்கும் உரியரென்பான் முன்னத்தினெடுத்துக் கூறுபவென்றானென்பது.

முன்னத்தினெடுத்தலென்பது, அதிகாரத்தான் அறநூற் கருத்தினானெடுத் துரைப்பவென்றவாறு; அவை,

“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
 மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யு
 நினையுங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே.”

(கலி. 9)

என்றாற்போல்வன.

இவ்வாறு வழக்கியலாணையாற் கிளவாது வாளாதே அவரைக் கண்டேமெனவும் அவர் இன்னுழிப் புகுவரெனவுஞ் சொல்லுவன:--

“கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.”

(505)

என்புழிக் கூறினாம் என்பது.

(195)

[கேட்போர் இவரெனல்]

508.மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியு
நினையுங் காலைக் கேட்குந ரவரே.

இது, கேட்போரென்னும் உறுப்புணர்த்துகின்றது.


1. இளம்பூரணருரையே பொருத்தம்; வருஞ் சூத்திரத்து அவர் என்பது ஒழிந்தோரையே சுட்டலின். இளம்பூரணருரை வருமாறு:-- தலைவனையும் தலைவியையும் ஒழிந்த பதின்மரும் அத் தலைவனோடும் தலைவியோடும் சொல்லிப்போந்த மரபாற் சொல்லப்பெறுவர். இடமுங் காலமுங் குறித்து என்றவாறு. சொல்லிப்போந்த மரபாவது: இவ்வாறு சொல்லுவரெனக் கற்பியலிற் சொல்லிப்போந்த மரபு. கண்டோர் கூற்று முன் வந்துள்ளது. அன்றியும் கண்டோர் எனச் சூத்திரியாமையானும் கண்டோர் கூற்றாகப் பொருள்கூறல் பொருந்தாதென்க.