பக்கம் எண் :

588செய்யுளியல்

“விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
 நின்மார் படைதலி னினிதா கின்றே.”

(அகம். 58)

என்னுந் தலைமகள் கூற்று, தலைமகன் கேட்டது.

“வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே.”

(நற். 9)

என்பது, தலைமகன் கூற்று, தலைமகள் கேட்டது.

1“நின்கேள்,
 புதுவது பன்னாளும் பாராட்ட யானு
 மிதுவொன் றுடைத்தென வெண்ணி.”

(கலி. 24)

எனவும்,

2“மாலையு முள்ளா ராயிற் காலை
  யாங்கா குவங்கொல் பாண.”

(அகம். 14)

எனவும்,

3“உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ.”

(அகம். 17)

எனவும்,

4“ஒண்டா ரகலமு முண்ணுமோ பலியே.”

(குறுந். 362)

எனவும்,

5“எல்லீரு மென்செய்தீ ரென்னை நகுதிரோ.”

(கலி. 142)

எனவும் இன்னோரன்ன வெல்லாந் தோழியும் பாணனும் செவிலியும் கண்டோரும் அறிவரும் கேட்பத் தலைமகள் கூற்று வந்தன. பிறவும் அன்ன.

6“இடிக்குங் கேளிர் நுங்குறை யாக
  . . . . . . . . . . . . . . . . . . . . . .
  பரந்தன் றிந்நோய் நொண்டுகொளற் கரிதே.”

(குறுந். 58)

எனவும்,

7“எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப
  . . . . . . . . . . . . . . . . . . . . .
  புதுக்கோள் யானையிற் பிணித்தற்றா லெம்மே”

(குறுந். 129)

எனவும்,

8“ஊர்க பாக வொருவினை கழிய.”

(அகம். 44)

எனவும்,

9“பேரமர் மழைக்கணின் றோழி யுறீஇய
  வாரஞ ரெவ்வங் களையா யோவென.”

எனவும்,


1. தோழி கேட்டது.

2. பாணன் கேட்டது.

3. செவிலி கேட்டது.

4. கண்டோர் கேட்டது.

5. அறிவர் கேட்டது.

6. பார்ப்பான் கேட்டது.

7. பாங்கன் கேட்டது.

8. பாகன் கேட்டது.

9. தோழி கேட்டது.