பக்கம் எண் :

பொருளதிகாரம்589

1“சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்.”

(கலி. 139)

எனவும் இவை பார்ப்பானும் பாங்கனும் பாகனும் தோழியும் கண்டோரும் கேட்போராகத் தலைமகன் கூற்று நிகழ்ந்தன. பிறவும் அன்ன.

“ஒன்றித் தோன்றுந் தோழி.”

(39)

என்றமையின், தோழி கூற்றுந் தலைமகள் (225) கூற்றேயாமென்பது.

(196)

[பார்ப்பார் கூற்றும் அறிவர் கூற்றும் யாவருங் கேட்பரெனல்]

509.பார்ப்பா ரறிவ ரென்றிவர் கிளவி
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே.

இதுவுமது.

இ--ள் : இது மேற்கூறிய பார்ப்பாரும் அறிவரும் கூறிய கூற்றுக் கேட்போரை இன்னாரென்று வரையப்படாது என்றவாறு.

என்றவழி, ‘யார்க்கும்’ என்றது, அகத்திணையோர்க்கும் புறத்திணையோர்க்கு மென்றவாறு. ‘யார்க்கும் வரையார்’ என்றதனை, எச்சப்படுத்துச் சிலர்க்கு வரையப்படுமென்பது கொள்க. என்னை? பார்ப்பார் கூற்று, தலைமகனும் செவிலியும் நற்றாயும் கேட்பினல்லது பிறர் கேட்டற் கேலா. அறிவர் கூற்று, தலைமகளுந் தோழியுஞ் செவிலியும் நற்றாயும் கேட்டற்குரியர்.

புறத்திணைக்கண்ணும் 2பொதுவியற் கரந்தையோர்க்கும் (185) பார்ப்பார் கிளவி ஏலாவெனவும், அறிவர்கிளவி ஏற்குமெனவும், பிறவு மின்னோரன்ன கொள்க.

‘யாப்பொடு புணர்ந்து’ என்பது, அகப்பொருளும் புறப்பொருளுமாக யாக்கப்படுஞ் செய்யுளெல்லாவற்றோடும் பொருந்து மென்றவாறு. இவர் கிளவி வரையப்படாதெனவே அறிவர் வாயிலாகியவழித் தலைமகள் வாயின் மறுத்தலிலளென்பதூஉம், புறத்திணைத் தலைவர்க்கும் அவ்வாறே 3வழிநிற்றல் வேண்டு


1. கண்டோர் கேட்டது.

2. பொதுவியற் கரந்தை--அகம் புறம் இரண்டற்கும் பொதுவான கரந்தைத் திணை.

3. வழி என்பது அவர்வழி என்றிருப்பது நலம்.