பக்கம் எண் :

செய்யுளியல்590

மென்பதூஉங் கூறியவாறாயிற்று; என்னை? அறிவரெனப்படுவார் மூன்று காலமுந் தோன்ற நன்குணர்ந்தோரும் புலனன்குணர்ந்த புலமையோரு மாகலானும், இனிப் பார்ப்பாரும் அவ்வாறே சிறப்புடையராகலானும், அவர்வழிநிற்றல் அவர்க்குக் கடனாகலானு மென்பது.

(197)

[பரத்தையும் வாயில்களுந் தலைவி கேட்பச்
சொல்லல்வேண்டுமெனல்]

510.பரத்தை வாயி னெவிரு கூற்றுங்
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப்பய மிலவே.

இது, பயனில்கூற்றுணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : பரத்தையும் வாயில்களுமென்னும் இரண்டு வேறு பாட்டின்கண்ணும் எழுந்த கிளவி கிழத்தி கேட்பாளாகக் கருதிச் சொல்லாக்காற் பயமிலவென்றவாறு.

கிழத்தியைச் சுட்டாவெனவே, 1பாங்காயினார் கேட்பச் சொல்லினும் அமையுமென்பதாயிற்று.

“செறிதொடி தெளிர்ப்ப வீசிச் சிறிதிவ
 ணுலமந்து வருகஞ் சென்மோ தோழி.”

(அகம். 106)

2என்றக்கால், தலைவிக்குப் பாங்காயினார் கேட்ப[ச் சொல்லி]க் கூறல்வேண்டுமென்பது. வாயில்களுந் தலைமகளை ஊடல்காப்பவல்லது சொல்லாராகலான் தலைமகள் கேட்பாளாகச் சொல்ல வேண்டுமென்பது. ‘சுட்டாக் கிளப்புப் பயமில’ என்றதனான், வாயில்கள் கூறுவனவுங் கிழத்திக்குப் பாங்காயின தோழி கேட்பச் சொல்லினும் அமையும். அவற்றுக்குச் செய்யுள்:

“ஓருயிர் மாத ராகலி னிவளுந்
 தேரா துடன் றனண் மன்னே.”

என்பது, கிழத்தி கேட்ப வாயில்கள் கூறியது. இது 3தோழி கேட்பச் சொல்லியதூஉமாம்.

(198)


1. பாங்காயினார்--கிழத்திக்குப் பாங்காயினார்.

2. இது தலைவிக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது என்றிருப்பது நலம்.

3. தோழி கேட்பினும் தலைவி கேட்டதேயாமென்க அவளின் வேறின்றாகலின் என்க. இனி இவள் அத்தலைவிக்கு அறிவிப்பாளுமாம்.