“எலுவ சிறாஅ ரெம்முறு நண்ப.” (குறுந். 129) என்னும் பாட்டும், “கேளிர் வாழியோ கேளிர் நாளுமென் நெஞ்சுபிணிக் கொண்ட வஞ்சில் லோதிப் பெருந்தோட் குறுமகள் சிறுமெல் லாக மொருநாள் புணரப் புணரி னரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே.” (குறு. 280) என்னும் பாட்டும் பாங்கற் கூட்டமே இடனாக ஒருவழிப் பட்டன; என்னை? நின் வேறுபாடு எற்றினானாயிற்றென்று வினவிய பாங்கற்கு இதனினானாயிற் றென்று உரைத்ததூஉம், அதற்குப் பாங்கன் கழறினானை எதிர் மறுத்ததூஉமென இரண்டும் பாங்கற்கூட்டத்துப் பட்டு ஓரியலான் முடிந்தன. அவை மேற் கூறியவகையானே கண்டுகொள்க. (201) [காலம் இதுவெனல்] | 514. | இறப்பே நிகழ்வே யெதிர தென்னுந் திறத்தியன் மருங்கிற் றெரிந்தன ருள்ளப்பொருணிகழ் வுரைப்பது கால மாகும். |
இது, காலமுணர்த்துகின்றது. இ--ள் : மூன்று காலத்தினும் நிகழ்கின்ற நிகழ்ச்சி அச் செய்யுளுட்டோன்றச் செய்யிற் காலமென்னும் உறுப்பாம் என்றவாறு. பொருணிகழ்ச்சியைக் காலமென்றதென்னை? காலமென வேறு பொருள் இல்லதுபோலவெனின்,--அஃது ஈண்டாராய்ச்சியின்று, நியாயநூலாராய்ச்சி யென்க. “வில்லோன் காலன கழலே தொடியோண் . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . வேய்பயி லழுவ முன்னி யோரே.” (குறுந். 7) என்னும் பாட்டினுள், வில்லோனுந் தொடியோளும் பொருளெனப்படும்; “வேய்பயி லழுவ முன்னி யோரே.” என்பது, அப்பொருணிகழ்ச்சியான் இறந்த காலமெனப்படும். அப்பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினாரென்பது. |