பக்கம் எண் :

594செய்யுளியல்

1“மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே
 யரும்பிய சுணங்கி னம்பகட் டிளமுலைப்
 பெருந்தோ ணுணுகிய நுசுப்பிற்
 கல்கெழு கானவர் நல்குறு மகளே.”

(குறுந். 71)

என்பது, நிகழ்காலம்.

“பகலும் பெறுவையிவ டடமென் றோளே.”

(கலி. 49)

என்பது, எதிர்காலம்.

புறத்திற்கும் இவ்வாறே இன்றியமையாதென்பது. பெரும்பொழுது சிறுபொழுதென்பன ஈண்டுத் திணையெனப்பட்டு அடங்கின; என்னை? முதலும் கருவும் உரிப்பொருளுங் கூட்டித் திணையாகலின்.

(202)

[பயன் இதுவெனல்]

515.இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே.

இது, முறையானே பயனென்னும் உறுப்புணர்த்துகின்றது.

இ--ள் : இது மிகவும் பயக்கும் இதனானெனத் தொகுத்துச் சொல்லப்படும் பொருள் பயனென்னும் உறுப்பாம் என்றவாறு.

“மாறாக் காதலர் மலைமறந் தனரே
 யாறாக் கட்பனி வரலா னாவே
 வேறா மென்றோள் வளைநெகி ழும்மே
 கூறாய் தோழியான் வாழு மாறே.”

என்னும் பாட்டு, தோழியைத் 2தூது விடுவாளாதற் பயன் பட வந்தது. இவ்வாறு எல்லாப் பாட்டும் பயனுறுப்பாகவன்றி வாராவென்க. இவை புறத்திற்கும் ஒக்கும்.

(203)

[மெய்ப்பாடாவது இதுவெனல்]

516.உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளான்
மெய்ப்பட முடிப்பது மெய்ப்பா டாகும்.

இது, மெய்ப்பாட்டுறுப் புணர்த்துகின்றது.


1. எனின்--என்று கருதின். இது நிகழ்வின் எதிர்வு. என்னை? கருதுதலாகிய தொழில் நிகழும்பொழுது இவ்வாறு கூறலின்.

2. இச் செய்யுள் தூதுவிடுதலைக் குறிப்பாலுணர்த்திற்று.