இ--ள் : உய்த்துணர்ச்சியின்றி செய்யுளிடத்து வந்த சொல்லப்படும் 1பொருள் தானே வெளிப்பட்டாங்குக் கண்ணீரரும்பன் மெய்ம்மயிர்சிலிர்த்தன் முதலாகிய 2சத்துவம் படுமாற்றான் வெளிப்படச்செய்வது மெய்ப்பாடென்னும் உறுப்பாம் என்றவாறு. கவிப்பொரு ளுணர்ந்தால், அதனானே சொல்லப்படும் பொருள் உய்த்து வேறு கண்டாங்கு அறிதலை மெய்ப்பாடென்றான், அது தேவருலகங் கூறினும் அதனைக் கண்டாங்கறியச் செய்தல் செய்யுளுறுப்பாம் என்றவாறு; அவை:-- “மையற விளங்கிய மணிமரு 3ளவ்வாய்தன் மெய்பெறா மழலையின் விளங்குபூ ணனைத்தர.” (கலி. 81) என்றாற்போல வருவன. ‘தலைவரு பொருளான்’ எனவே, நோக்குறுப்பால் உணர்ந்த பொருட் 4பிழம்பினைக் காட்டுவது மெய்ப்பாடென்பது இதன் கருத்து. இக்கருத்தினாற் ‘கவி 5கண்காட்டும்’ எனவுஞ் சொல்லுப. (204) [இம் மெய்ப்பாடு முற்கூறப்பட்ட மெய்ப்பாடே வேறன்று எனல்] | 517. | எண்வகை யியனெறி பிழையா தாகி முன்னுறக் கிளந்த முடிவின ததுவே. |
இஃது, எய்தியது இகந்துபடாமைக் காத்தது. இ--ள் : மேற்கூறப்பட்ட மெய்ப்பாடே இது; இதுவும் பிறிதிலக்கணத்தனவென்று கொள்ளற்க என்றவாறு. எனவே, “நகையே யழுகை யிளிவரன் மருட்கை யச்சம் பெருமிதம் வெகுளி யுவகை.” (251)
1. பொருளானே கண்ணீரரும்பல் . . . . . . . . .சத்துவம்படுமாற்றான்’ என்று நச்சினார்க்கினியர் கூறலின் இவ்வாக்கியத்தில் பிழையுளதுபோலும். 2. சத்துவம்--உண்மையை வெளிப்படுத்துவது; விறல். 3. குழவியின் வாய் நீரொழுகுமாற்றை நேரே கண்டாங்குப் பொருள்தோன்ற இவ்வடிகள் செய்யப்பட்டன. 4. பிழம்பு--வடிவு. 5. கண்காட்டல்--குறிப்பால் தானே தோற்றுவித்தல். |