என்பது, தானே தன்மகனை வாயில்கொண்டு புக்கானாயினும் அதனைப் பழங்கண்ணோட்டம் முன் நலிதரப்பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலின் அப்பெயர்த்தாயிற்று. ஐயஞ்செய்தலென்பது, “தூதவர் விடுதரார் துறப்பார்கொ னோதக விருங்குயி லாலு மரோ.” (கலி. 33) என்புழி, நம்மை இம்மைப்பிறப்பினுள் துறப்பார்கொல்லென வாழாதே ஐயஞ்செய்தமையின் ஐயமாயிற்று. 1அவன்றம ருவத்தலென்பது: “ஊர னூரன் போலுந் தேரும் பாணன் றெருவி னானே.” (இ. வி. ப. 538) என்பது, 2அவன்றமரைக்கண்டு உவந்தது. இது முனிவெனப் படாதோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லது, பகைபட நிகழாக் குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டன்மையன்றாமாகலின். “அவர்நாட்டு, மாலைப் பெய்த மணங்கம 3ழுந்தியொடு காலை வந்த 4காந்தண் முழுமுதன் மெல்லிலை குழைய முயங்கலு மில்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே.” (குறு. 361) என்பதும் அது. அறனளித்துரைத்தலென்பது, அறக்கிழவனை அன்பு செய்தல்; அது, “பாங்கர்ப் பல்லி படுதொறும் 5பரவிக் கன்றுபுகு மாலை நின்றோ ளெய்தி.” (அகம். 9) என வரும்.
1. அவன்றமர் என்றது பாணன் முதலியோரை. 2. அவன்தமர் என்றது ஈண்டுப் பாணனை. 3. உந்தி--ஆற்று வெள்ளம். 4. அவன் நாட்டு ஆற்றுவெள்ளத்தோடுவருங் காந்தட்கிழங்கை உவந்தமையின் அவன்றமர் உவத்தலாயிற்று. அவன் நாட்டுக் காந்தளாதலின் தமராயிற்று. 5. பல்லியைப் பரவினமையின் அறனளித்துரைத்தலாயிற்று. பல்லியில் அதிட்டித்து நின்று சொன்னது தரும தெய்வமென்று கொண்டு அன்புசெய்து அதனைப் பரவினாள் என்க. அதிட்டித்து நின்று சொல்லுவித்தமையின் அத்தெய்வத்தைப் பரவினாள் எனினுமாம். |