[பெட்டை என்னும் பெயர்க்குரியன இவை எனல்] | 607. | ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை பெட்டை யென்னும் 1பெயர்க்கொடைக் குரிய. |
இ--ள் : ஒட்டகமுங் குதிரையும் கழுதையும் மரையாவும் பெட்டையென்னும் பெயர்பெறும் என்றவாறு. ஒட்டகப்பெட்டை குதிரைப்பெட்டை கழுதைப்பெட்டை மரையான்பெட்டை என வரும். (52) [அப்பெயரைப் புள்ளும் பெறுமெனல்] | 608. | புள்ளு முரிய வப்பெயர்க் கென்ப. |
இ--ள் : எல்லாப் புள்ளும் பெட்டையென்னும் பெயரான் வழங்குதற்குரிய என்றவாறு. அவை, கோழிப்பெட்டை மயிற்பெட்டை என வரும். பிறவும் அன்ன. (53) [பேடையும் பெடையும் புள்ளுக்குரிய எனல்] | 609. | பேடையும் பெடையு நாடி னொன்றும். |
இ--ள் : பேடையும் பெடையு மென்னும் இரண்டும் முன்னர் நின்ற புள்ளிற்கு 2ஒன்றும் என்றவாறு. அவை, குயிற்பேடை, அன்னப்பெடை என வரும். ‘நாடின்’ என்றதனாற் பெட்டையென்பது வழக்கினுட் பயிலாவென்பது. (54) [அளகென்னும் பெயர் இவைக்குரிய எனல்] | 610. | கோழி கூகை யாயிரண் டல்லவை சூழுங் காலை யளகென லமையா. | (55) |
| 611. | அப்பெயர்க் கிழமை மயிற்கு முரித்தே. | |
இ--ள் : கோழியும் கூகையும் மயிலு மென்பனவற்றுக்கு அளகென்னும் பெயர் உரியது என்றவாறு.
1. பெயர்க்கொடைக்கு -- பெயரைத் தமக்குக் கொடுத்தற்கு = எனவே பெயரைப் பெறுதற்கு என்றபடி. 2. ஒன்றும்--பொருந்தும் என்றபடி. |