பக்கம் எண் :

பொருளதிகாரம்657

இ--ள் : ஆவென்னும் பெயர், பெற்றமும் மரையும் எருமையும் பெறும் என்றவாறு.

அவை,

“புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி.”

(அகம். 56)

எனவும்,

“சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்.”

(அகம். 46; குறுந். 261)

எனவும்,

“மரையா மரல்கவர மாரி வறப்ப.”

(கலி. 6)

எனவும் வரும்.

(60)

[பெண் என்பதும் பிணா என்பதும் மக்கட்குரிய எனல்]

616.பெண்ணும் பிணாவு மக்கட் குரிய.

இ--ள் : பெண்ணும் பிணாவும் உயர்திணைப் பெண்மைக்குரிய என்றவாறு.

பெண்ணென்பது,

“பெண்பா லெல்லாம் பெண்ணெனற் குரிய.”

(தொல். மர. 50)

என்றமையின், ஈண்டுக் கூறுதல் மிகையாம் பிறவெனின்,--அற்றன்று; அச்சூத்திரம் அஃறிணையதிகாரமாகலின், ஈண்டு விதந்தோதினானென்பது. ஒன்றென முடித்தல் (665) என்பதனான், உயர்திணை ஆணென்பதும் ஈண்டே கொள்ளப்படும்.

“பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி”

(அகம். 112)

எனவும்,

“ஈன்பிண வொழியப் போகி.”

(பெரும்பாண். 90)

எனவும் வரும்.

“ஆண்கட னுடைமையிற் பாண்கட னாற்றிய”

(புறம். 201)

என ஆணென்பது உயர்திணைக்கண் வந்தது. பிறவும் அன்ன 1பிணாவென்னும் ஆகாரவிறுதி வன்கணமன்மையிற் குறியதன்


1. பிணாவும் என்பது பிணா உம் எனப் பிரிந்து நிற்குங்கால் உம் என்னும் வருமொழி முதலெழுத்து உயிராகும். அதனால் பிணவு என ஆகாரம் அகரமாய் உகரம் பெறாதாயிற்று என்றார். “குறியத னிறுதிச் சினைகெட வுகரம்--அறிய வருதல் செய்யுளு ளுரித்தே.” என்னும் உயிர்மயங்கியல் 32-ம் சூத்திரம் பிணவு என வருதற்கு விதி. பிணாவும் என்பது உடம்படுமெய் பெற்று வந்தது.