இறுதிச் சினைகெட்டு உகரம்பெறாது நின்றது. ‘மக்கட்குரிய’ எனவே, உரியவன்றித் “துறுகல் விடரளைப் பிணவுப்பசி கூர்ந்தென.” (அகம். 147) எனப் புலி முதலியவற்றிற்குங் கொள்க. (61) [நாகு என்னும் பெயர் இவைக்குரியதெனல்] | 617. | எருமையு மரையும் பெற்றமு நாகே. | (62) |
| 618. | நீர்வாழ் சாதியு ணந்து நாகே. | |
இ--ள் : இந்நான்கற்கும் நாகெனும் பெயர் உரித்து என்றவாறு. “எருமை நல்லான் கருநாகு பெறூஉம்” (பெரும்பாண். 165) எனவும், “உடனிலை வேட்கையின் மடநாகு தழீஇ யூர்வயிற் பெயரும் பொழுதின்” (அகம். 64) எனவும், “நாகிள வளையொடு பகன்மணம் புகூஉம்” (புறம். 266) எனவும் வரும். (63) [மூடும் கடமையும் யாட்டிற்குரிய எனல்] | 619. | மூடுங் கடமையும் யாடல பெறா. |
இ--ள் : இவ்விரு பெயரும் யாட்டிற்கேயுரிய பெண்மைப்பெயர் என்றவாறு. இவை இப்பொழுது வழக்கினுள் அரிய. (64) [பாட்டி என்னும் பெயர் இவற்றிற்குரியதெனல்] | 620. | பாட்டி என்பது பன்றியு நாயும். | (65) |
| 621. | நரியு மற்றே நாடினர் கொளினே. | |
இ--ள் : பாட்டியென்று சொல்லப்படுவன பன்றியும் நாயும் நரியும் என்றவாறு. 1பிறவும் அன்ன. (66)
1. பிறவுமன்ன என்பது இவையுமன்ன என்றிருத்தல்வேண்டும். இவையும் அன்னவென்றது இவையும் வழக்கினுள் அரிய என்றபடி. |