இது 1வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடு இவை எட்டுமென்ப துணர்த்துதல் நுதலிற்று. இ-ள் : முட்டுவயிற் கழறல்--தலைக்கூட்டத்திற்கு முட்டுப்பாடாகியவழிக் கழறியுரைத்தலும்: அது, “நொச்சி வேலித் தித்த னுறந்தைக் கன்முதிர் புறங்காட் டன்ன 2பன்முட் டின்றாற் றோழிநங் களவே.” (அகம். 122) என்பது; இது, தலைமகன் கேட்பக் 3கழறியுரைத்தது. 4முனிவுமெய்ந் நிறுத்தல்--தலைமகளுள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கு நிலைமையும்; அது, 5”இன்னுயிர் கழிவ தாயினு நின்மக ளாய்மல ருண்கட் பசலை காம நோயெனச் செப்பா தீமே.” (அகம். 52) என்புழி, 6வாழ்க்கை முனிந்து தலைமகள் சொல்லியது. அச்சத்தினகறல்--தலைமகன்கண்வரும் 7ஏதமஞ்சி அவனை நீங்குங் குறிப்பும்: “மன்றுபா டவிந்து.........மயங்கி இன்ன மாகவு நன்னர் நெஞ்ச மென்னொடு நின்னொடுஞ் சூழாது கைம்மிக் கிறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற் குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப்புறத் தன்ன கன்மிசைச் சிறுநெறி மாரி வானந் தலைஇ நீர்வார்
1. வரைந்தெய்துங்கூட்டம்--மணச்சடங்குசெய்து புணரும் புணர்ச்சி. 2. பன்முட்டின்று--பல முட்டுப்பாட்டையுடைத்து. முட்டுப்பாடு--.தடை. இது முட்டுவயிற் கழறல். 3. கழறல்--இடித்துக்கூறல். 4. முனிவுமெய்ந் நிறுத்தல்--தலைமகள் தன் வெறுப்பை வெளிப்படக் காட்டிநிற்றல். 5. இன்னுயிர் கழிவதாயினுஞ் சொல்லாதீம் என்றதனால் உயிர் வாழ்க்கையை வெறுத்துக் கூறியதாயிற்று. இச்செய்யுள் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6. வாழ்க்கை--உயிர்வாழ்க்கை. 7. ஏதம்--தீங்கு: என்றது வரும்வழியின் கட்டீங்கை. நீங்கல்--பிரிந்திருத்தல். |