பக்கம் எண் :

பொருளதிகாரம்67

பிட்டருங் கண்ண படுகுழி யியவி
னிருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே.”

(அகம். 128)

என்னும் பாட்டினை முழுதுங் கொள்க; அதன் கருத்தாவது; நாம் அவர் இருளிடை வருத லேதமஞ்சி அகன்று1வலித்திருப்பவும் என்னையும் நின்னையுங் கேளாது என்னெஞ்சு போவானேனென்றவாறாயிற்று.

அவன் புணர்வு மறுத்தல்--இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கெழுந்த உள்ள நிகழ்ச்சியும்; 2அது தமரையஞ்சி மறுத்தமையானும், 3இது வரைவு 4கடாவுதற்குக் கருத்தாகலானுந் திளைப்பு வினைமறுத்தலோடு (265) இது வேற்றுமையுடைத்து.

“நல்வரை நாட நீவரின்
5மெல்லிய லோருந் தான்வா ழலளே.”

(அகம். 12)

என்பது, தலைமகள் குறிப்பினைத் தோழி கூறியதாகலான் அஃது அவன்புணர்வு மறுத்தலெனப்படும். இஃது ‘ஒன்றித் தோன்றுந் தோழி மேன’ (39) என்னும் இலக்கணத்தால் தோழி குறிப்பாயினுந் தலைமகள் குறிப்பெனவே படுமென்பது கொள்க.

தூது 6முனிவின்மை--புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூதிரந்து பன்முறையானுஞ் சொல்லுதலும்; அவை,

“கானலுங் கழறாது கழியுங் கூறாது
 தேனிமிர் நறுமலர்ப் புன்னையு மொழியா
 தொருநின் னல்லது பிறிதுயாது மிலனே
 யிருங்கழி மலர்ந்த கண்போ னெய்தற்
 கமழிதழ் நாற்ற மமிழ்தென நசைஇத்
 தண்டா தூதிய வண்டினங் களிசிறந்து
 பறவை கிளருந் துறைவனை நீயே
 சொல்லல் வேண்டுமா 7லலவ.”

;(அகம். 170)


1. வலித்திருத்தல்--நெஞ்சைத் திடப்படுத்தியிருத்தல்.

2. அது--திளைப்பு வினைமறுத்தல்.

3. இது--அவன் புணர்வு மறுத்தல்.

4. கடாவுதற் கருத்தென்றிருப்பதே பொருத்தம்.

5. ‘மெல்லி யாளொரு நாள்வா ழலளே’ எனவும் பாடம்.

6. முனிவின்மை--வெறாமை.

7. அலவன்--ஞெண்டு.