என்புழி, கூறப்பட்டனவெல்லாந் தூதாகலின், தூதுவிடுதலை வெறாததன்மை கூறியதாம் இப்பாட்டென்பது. “புல்வீ 1ழிற்றிக் கல்லிவர் வெள்வேர் வரையிழி யருவியிற் றோன்று நாடன் றீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின் Hவந்தன்று வாழி தோழி நாமு 2நெய்பெய் தீயி னெதிர்கொண்டு தாமணந் தனையமென விடுகந் தூதே.” (குறு. 106) என்பதேதோவெனின், அது கற்பிற்கல்லது ஏலாது; என்னை? களவினுள் நெய்பெய் தீயின்வந்து எதிர்கொளலாகாமையின். துஞ்சிச்சேர்தல்--மனையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதலும். துஞ்சுதலெனினும் மடியெனினும் ஒக்கும். வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின் தலைமகனொடு புலந்தாள்போல, மடிந்தொன்றுமாதலின் அதனைத் துஞ்சிச்சேர்தலென்றானென்பது; எங்ஙனமோவெனின், 3”என்மலைந் தனன்கொ றானே தன்மலை யார நாறு மார்பினன் மாரி யானையின் வந்துநின் றனனே.” (குறு. 161) என்புழி, என்னகாரியம் மேற்கொண்டுவந்தானென்றமையின் இது துஞ்சிச்சேர்தலாயிற்று. அல்லாக்கால் அங்ஙனஞ் சொல்லுதல் அன்பழிவெனப்படும். “ஆமிழி யணிவரை.” (கலி. 48) என்னுங் குறிஞ்சிப்பாட்டினுட், “பின்னீதல் வேண்டுநீ பிரிந்தோணட் பெனநீவிப் 4பூங்கண் படுதலு மஞ்சுவ றாங்கிய
1. இற்றி--ஒருமாம். 2. நெய்பெய்தீ சுவாலித்தெழின் யார்க்குந் தெரியும். அது போல வெளிப்படவந் தெதிர்கொள்ளல் கற்பிற்கல்லது களவிற்கின்று என்றபடி. 3. என்மலைந்தனன்--என்னகாரிய மேற்கொண்டு வந்தான். 4. பூங்கண்படுதலு மஞ்சுவல்--கனவிலடையுந் துயரத்தாலான கேடு மலையினும் பெரிதாகலின் கண்படுதற்கும் அஞ்சுவேன் என்பது கருத்தாகலின் இதுவுந் துஞ்சிச்சேர்தற் கருத்துளடங்கும் என்றபடி. இது தோழி கூற்று. தலைவி கண்படுதற்கும் அஞ்சுவேன் என்றதனால் பிரிவையாற்றாது துயிலின்றி மடிந்து கிடக்கின்றாள் என்பது பெறப்படும். ஆதலிற் றுஞ்சிச்சேர்தல் ஆயிற்று. Hநயந்தன்று எனவும் பாடம். |