பக்கம் எண் :

662மரபியல்

இஃது, உயர்திணை நான்குசாதியும்பற்றிய மரபு உணர்த்துவான், முறையானே அந்தணர்க்குரிய மரபுபட்டுவருங் கலப்பை வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

இ--ள் : முந்நூலுங் 1குண்டிகையும் முக்கோலும் 2யாமை மணையும் போல்வன அந்தணர்க்கு உரிய என்றவாறு.

‘ஆயுங்காலை’ என்றதனால், குடையும் செருப்பும் முதலாயினவும் ஒப்பன அறிந்துகொள்க.

உதாரணம்:

“எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ
 லுறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும்.”

(கலி. 9)

எனவும்,

“தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
 படிவ வுண்டிப் பார்ப்பன மகனே.”

(குறுந். 156)

எனவும் வரும்.

இன்னும், ‘ஆயுங்காலை’ என்றதனான், 3ஒருகோலுடையார் இருவருளர், அவர் துறவறத்து நின்றாராகலின் உலகியலின் ஆராயப்படாரென்பது. 4முக்கோலுடையார் இருவருட் பிச்சைகொள்வானும் பிறாண்டிருந்து தனதுண் பானும் உலகியலின் நீங்காமையின் அவரையே வரைந்தோதினானென்பது.

மற்று, அரசர்க்கும் வணிகர்க்கும் உரிய நூலினை ஈண்டு 5வரைந்தோதினதென்னையெனின்,--ஒருகோலுடையான்6நூல் களைவானா கலின் அவனுஞ் சிறுபான்மை அந்தணனெனப்படுமென்பது கோடற்கும் கரகமும் மணையும் உடையனென்றற்கு மென்பது. நூலினை முற்கூறினான், 7பிறப்பு முறையானுஞ்


1. குண்டிகை--நீர் மொண்டுவைத்திருக்கும் பாத்திரம்.

2. யாமைமணை--யாமை வடிவாகச் செய்த ஆசனப்பலகை.

3. ஒருகோலுடையாரிருவர் என்றது: ஹம்சன், பரமஹம்சன் என்னுஞ் சந்நியாசிகளிருவரையும்.

4. முக்கோலுடையாரிருவரென்றது: பகூதகன், குடீசகன் என்னுஞ் சந்நியாசிகளிருவரையும். இவர்களியல்பை அரும்பதவுரையுள் கூறுதும். ஆண்டுக் காண்க.

5. வரைந்து--நியமித்து.

6. நூல்களைவான்--பரமஹம்ச சந்நியாசி.

7. பிறப்புமுறை--துவிஜன் என்னும் பிறப்பைக் காட்டுமுறை.