1சிறப்புமுறையானுமென்பது. இனி, குடுமியுங் குசையும்போல்வன கூறிற்றிலன், அது 2முன்னரும் பின்னரும் வருதலானும், மன்னரும் வணிகரும் பெறுதலானுமென்பது. (70) [அரசர்க்குரியன இவை எனல்] | 626. | படையுங் கொடியுங் குடையு முரசு நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரு முடியு நேர்வன பிறவுந் தெரிவுகொள் செங்கோ லரசர்க் குரிய. |
இது, முறையானே அரசர்க்குரியன கூறுகின்றது. இ-ள் : 3கொடிப்படையும் கொடியும் குடையும் முரசும் குதிரையும் யானையும் தேரும் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய என்றவாறு. ‘பிறவும்’ என்றதனால், 4கவரியும் அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க. ‘தெரிவுகொள் செங்கோ லரசர்’ என்றதனானே, 5செங்கோல் கொளப்பட்டது. 6‘தார்’ எனவே, போர்ப்பூவும் தார்ப்பூவும் அடங்கின. ‘படை’ என்புழி, ‘நடைநவில் புரவியுங் களிறுந் தேரும்’ அடங்காதோவெனின்’--அடங்கும், அவை நோக்கிக் கூறினானல்லன்; 7அவை பட்டஞ் சாத்தியவாதல் நோக்கிக் கூறப்பட்
1. சிறப்புமுறை--ஏனையவற்றிலும் நூல் சிறந்ததாகிய முறை. நூல் இட்டபின் கரகந் தாங்கல்பற்றிப் பிறப்புமுறை என்றார் எனினுமாம். (642-ம் சூத்திர உரை நோக்குக). 2. முன்னர்--நூலிடுதற்குமுன். பின்--நூலிட்டபின். குடுமி முன்னும் குசை பின்னுமென்க. 3. கொடிப்படை--கொடி தாங்கும் படை = தார்ப்படை. 4. கவரி--சாமரை. அரியணை--சிங்காசனம். அரண்--மதில். இக்காலத்துக் கோட்டை என்பர். 5. செங்கோல்--உடம்பொடுபுணர்த்தலாற் கொள்ளப்பட்டது. உடம்படு புணர்த்தல் என்பர் சங்கரநமச்சிவாயருரையுள் டாக்டர் சாமிநாதையரவர்கள். 6. தார்--பூமாலை. போர்ப்பூ--வெட்சி. வஞ்சி போல்வன தார்ப்பூ--வேம்பு ஆர் போல்வன. 7. அவை--குதிரையும் யானையும். பட்டஞ்சூட்டல்பற்றியே பட்டத்துக் குதிரை பட்டத்து யானை என்பர். |