பக்கம் எண் :

664மரபியல்

டன. அஃதேல், தேர் கூறியதென்னையெனின்,--அதுவும் அவைபோல அரசர்க்கே உரியதென்றுளதென்றற்கும், அது பூண்ட குதிரையும் அவர்க்கே யுரியவென்றுளவென்றற்குங் கூறினானென்பது. இக்கருத்தினாற்போலும் ‘நடைநவில்’ புரவி’ எனச் சிறப்பித்து அதனை முற்கூறியதென்பது.

எல்லாவற்றினுஞ் சிறந்ததாதலான் 1முடி பிற்கூறப்பட்டது. ‘தெரிவுகொள் செங்கோ லரசர்’ என்பதனான், அரச ரெல்லாந் தந்நாட்டு நன்றுந் தீதும் ஆராய்ந்து 2அதற்குத்தக்க தண்டஞ்செய்தற்கு உரிமையும் 3அதுவெனக் கொள்க.

(71)

[அந்தணர்க்குரியவற்றுட் சில அரசர்க்குமுரியவாமெனல்]

627. அந்த ணாளர்க் குரியவு மரசர்க்
கொன்றிய வரூஉம் பொருளுமா ருளவே.

இது, மேலதற்கோர் புறனடை.

இ--ள் : அந்தணாளர்க்கு உரியவென மேல் ஓதப்பட்டனவற்றுண் முந்நூலும் மணையும்போல்வன அரசசாதிக்குரியவாகியும் வரும் என்றவாறு.

‘பொருளுமாருள’ என்றதனான், அந்தணாளர்க்குரியனவற்றுள் வேள்விக் 4கலப்பை யொன்றிவருதல் பெரும்பான்மையென உணர்க; ஈண்டு 5அவற்றை விதந்தோதினான் ஒழிந்த புலனெறி வழக்கினுட் பயிலாமையினென்பது.

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமு
 மைவகை மரபி னரசர் பக்கமு
 யிருமூன்று மரபி னேனோர் பக்கமும்.”

(தொ. புற. 20)


1. எல்லாவற்றிலுஞ் சிறந்ததைப் பிற்கூறலும் வழக்கு. “சிறப்புடைப் பொருளைப் பிற்படக் கிளத்தல்” என்பது பழைய சூத்திரம்.

2. அதற்குத்தக்க--அதற்குத்தக என்றிருப்பதே பொருத்தம். ‘அதற்குத்தக வொறுத்தல்’ என்பர். பரிமேலழகரும். அதற்கு--தீதிற்கு.

3. அது--செங்கோல் = முறை. செவ்விய கோல்போறலின் முறை செங்கோல் எனப்பட்டது. ‘உரிமையும் அது’ என்பது உரிமையுடையரென்றும் பாடமுள்ளது.

4. கலப்பை--உபகரணம்.

5. அவற்றை--வேள்விக் கலப்பையை.