பக்கம் எண் :

பொருளதிகாரம்665

பற்றி வாகைப்பொருள் பிறத்தலின் அவற்றைப் புறத்திணையியலுட் கூறினானாயினும், ஈண்டுத் தழீஇக் கொள்ளப்படும் மரபுவகையானென்பது; என்போலவெனின்,--

“அ இ உ அம் மூன்றுஞ் சுட்டு.”

(தொ. எழு. 31)

என நூன்மரபினுள் ஓதிய மூவகைச் சுட்டினை இடைச்சொலோத்தினுள் ஓதானாயினான், அதுபோலவென்பது.

“கொன்று 1களம் வேட்ட ஞான்றை.”

(அகம். 36)

எனவும்,

“அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய.”

(புறம். 26)

எனவும், அரசர்க்கு வேள்விகூறியவாறு; பிறவும் அன்ன,            (72)

[அந்தணர்க்குரித்தல்லாதன இவை எனல்]

628. பரிசில்பா டாண்டிணைத் துறைக்கிழ மைப்பெயர்
நெடுந்தகை செம்ம லென்றிவை பிறவும்
பொருந்தச் சொல்லுத லவர்க்குரித் தன்றே.

இஃது, ஐயம் அறுத்தது; அந்தணாளர்க்குரியன அரசர்க்குமுரியன உளவெனக் கேட்ட மாணாக்கன் ‘அரசர்க்குரியனவும் அந்தணர்க்குரியகொல்’ என்று ஐயுறாமற் காத்தமையின். இஃது, எய்தியதன்மேற் சிறப்புவிதியெனினும் அமையும்; என்னை? ஈண்டு ஓதப்பட்டவை அரசர்க்குரியவென்பது கொள்ளப்பட வைத்தமையின்.

இ--ள் : பரிசில்--பரிசில் கடாநிலையும், பரிசில் விடையும் போல்வன; பாடாண்டிணைத்துறைக் 2கிழமைப்பெயர்--பாடாண்டிணைக்குரிய கைக்கிளைப் பொருள்பற்றியுங் கொடைத்தொழில் பற்றியும் பெறும்பெயர்; அவை, காளை இளையோன் என்பன போல்வன [அவையு]ம், நெடுந்தகை செம்மலென்பன முதலாயினவும், இவைபோல்வன பிறவும் புனைந்துரைவகையாற் சொல்லினல்லது சாதிவகையாற் கூறுதல் அந்தணர்க்குரித்தன்று என்றவாறு.

3பரிசில் கடாநிலையும் 4பரிசில் விடையும்போல்வன கூறியும், கைக்கிளைப்பொருள் கூறியும், கொடைத்தொழில் கூறி


1. களம்வேட்டல்--களவேள்வி செய்தல்.

2. கிழமை--உரிமை.

3. பரிசில் கடாநிலை--பரிசில் வேண்டல்.

4. பரிசில் விடை--பரிசில் கொடுத்து விடுத்தல்.