யும், அவற்றிற்கேற்ப எடுத்தோதிய பெயர் கூறியும், அந்தணரைத் 1தன்மைவகையாற் செய்யுள் செய்யப்பெறாவென்பது கருத்து. புனைந்துரைவகையான் அவையாமாறு:-- 2”எண்ணாணப் பலவேட்டு மண்ணாணப் புகழ் பரப்பியும்.” (புறம். 166) என வரும். கொடுத்தற்றொழில் வேள்விக்காலத்ததென வரையறுத்தலிற் பொருந்தக் கூறுதல் அவர்க்குரித்தன்றென்றானென்பது. பாடாண்டிணைத் துறைப்பெயரென்னாது, கிழமைப் பெயரென்ற தென்னையெனின்,--அவை ஐந்திணைப் பெயராகி வருங்காலும் அவர்க்குரியவல்லவென்றற்கு; எனவே, அரசர்க்காயின் இவையெல்லாம் உரியவென்பவாயிற்று. மற்றுப் பாடாண்டிணைக்குரியவல்லவென மற்றைத்திணைக் கிழமைப்பெயர் உரியவாம் பிறவெனின்,--அஃது, “இடையிரு வகையோ ரல்லது நாடிற் படைவகை பெறாஅர்.” (தொ. மர. 76) என மேற்கூறி விலக்குமென்பது. (73) [நான்கு வருணத்தாருக்கும் ஊர் முதலியவு முரியவெனல்] | 629. | ஊரும் பெயரு முடைத்தொழிற் கருவியும் 3யாருஞ்4சார்த்தி யவையவை 5பெறுமே.< |
இது, மேற்கூறிய அந்தணர்க்கும் அரசர்க்கும் உரியனவற்றொடு ஒழிந்த சாதியோர்க்கும் ஒப்பன உடன் கூறுகின்றது. இ-ள் : நான்கு சாதியாரும் பிறந்த ஊரும், அவர்தம் பெயரும், அவர் சாதிக்கு உரித்தென்றற்கேற்ற கருவியும், யாருஞ் சார்த்தப்பட்டு அவை அவை பெறுப என்றவாறு.
1. தன்மை--இயற்கை. 2. எண்--அளவு. 3. யாரும்--எல்லாச் சாதியாரும். 4. சார்த்தி--சார்த்திச் சொல்லப்பட்டு. 5. பெறும் என்பது உரையிற் கண்டபடி பெறுப என்றிருத்தல்வேண்டும். இளம்பூரணரும் ‘பெறும்’ என்றே பாடங்கோடலின் இது ஆராயத்தக்கது. |