பக்கம் எண் :

பொருளதிகாரம்671

யும் மரபுபற்றி ஈண்டு வரையறை கூறுகின்றவாறெனக் கொள்க. அவையும் அவரவர் பாட்டுக்களுட் கண்டுகொள்க.

(81)

[அந்தணாளர் அரசுத் தொழிலும் பெறுவரெனல்]

637.அந்த ணாளர்க் கரசுவரை வின்றே.

இஃது, எல்லாவற்றினுஞ் சிறுவரவிற்றாகி அரசர்க்குரிய தொழில் அந்தணர்க்குரியவாகலின் ஈண்டு போதந்து கூறுகின்றது.

இ--ள் : அரசர் இல்வழி அந்தணரே அவ்வரசியல் பூண்டொழுகலும் வரையப்படாது என்றவாறு.

மக்களைத்தின்ற மன்னவர்க்குப்பின்னை மறையோரான் அரசு தோற்றப்பட்டாற்போலக் கொள்க.

(82)

[இது குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது]

638.வில்லும் வேலுங் கழலும் கண்ணியுந்
தாரு மாலையுந் தேரும் வாளு
மன்பெறு மரபி னேனோர்க்கு முரிய.

இது, முடியுடை, வேந்தரல்லாக் குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது.

இ--ள் : இவ்வெண்ணப்பட்டனவெல்லாங் குறுநில மன்னர்க்கு உரியன என்றவாறு.

‘மன்பெறு மரபினேனோர்’ எனப்படுவார், அரசுபெறு மரபிற் 1குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும்.

(83)

[இழிந்தோர் வில் முதலியன பெறார் எனல்]

639. அன்ன ராயினு மிழிந்தோர்க் கில்லை.

இஃது, எய்தியது இகந்துபடாமைக் காத்தது.

இ--ள் : மன்னவர்போலுஞ் செல்வத்தாராகி இழிகுலத்தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது என்றவாறு.


1. குறுநில மன்னராவார் பாரி முதலாயினோர்.