“மன்பெறு மரபி னேனோர்.” (638) எனவே, அரசர் வைசியரன்றிக்1கீழ் அமையாவாயிற்று. (84) [புறக்காழுடையன இன்ன பெயரான் வழங்கப்படுமெனலும் அகக்காழுடையன இன்ன பெயரான் வழங்கப்படுமெனலும்] | 640. | புறக்கா ழனவே புல்லென மொழிப வகக்கா ழனவே மரமென மொழிப. |
இது, மக்களை வழங்குமாற்றுக்கண் மரபுகூறி, இனி ஓரறிவுயிர்க்கு இன்னவாறு சொல்லுதன் மரபென்பதுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : புறத்துக்காழ்ப்புடையவற்றைப் புல்லெனவும் அகத்துக்காழ்ப் புடையனவற்றை மரமெனவுஞ் சொல்லுப என்றவாறு. ‘புறக்காழன; எனவே,2அல்வழி வெளிறென்பது அறியப்படும்; 3அவை பனையுந் தெங்கும் கமுகும் முதலாயின புல்லெனப்படும்; இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும். இங்ஙனம் வரையறை கூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத்தும் கொடிமுதலாயின 4காழ்ப்பின்றியும் அகின்மரம்போல்வன இடையிடை 5பொய்பட்டும் புல்லும் மரனும் வருவன உளவாலெனின்,--இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமையானும் ‘எனமொழிப’ என்று இருவழியுஞ் சிறப்பித்து விதந்தமையானுஞ் சிறுபான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்குமென்பது. “இரும்பனம் புல்லின் பசுந்தோட்டுக் குடம்பை.” எனவும், “யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவின்.” (குறுந். 198) எனவும் வரும்.
1. கீழ்--குறுநில மன்னரினும் வேளாளர் காணப்படலின் கீழ் என்பதற்கு ஐந்திணைத் தலைவர் போல்வாரைக் கூறல் நலம். இதற்கும் முதற் சூத்திரத்திற்கும் இளம்பூரணர் வேறு பொருள் கூறுவர். 2. அல்வழி -- புறமல்லாத இடம். எனவே அகமென்றாயிற்று. 3. அவை--என்பது வேண்டியதில்லை. 4. காழ்ப்பு--வயிரம். 5. பொய்--உள்ளீடின்மை. |