இன்னும் இவ்விலேசானே புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவுங் கொள்க; அவை, “ஈன்றவ டிதலைபோ 1லீர்பெய்யுந் தளிரொடும்.” (கலி. 32) என ஈர்க்கென்பது மாவிலைமேல் வந்தது. பிறவும் அன்ன. (87) [மேற்கூறிய இரண்டற்கும் பொதுவாகச் சொல்லப்படும் உறுப்புக்களிவை எனல்] | 643. | காயே பழமே தோலே செதிளே வீழோ டென்றாங் கவையு மன்ன. |
இது மேற்கூறிய இரண்டற்கும் பொதுவுறுப்புணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : இவையும் அவ்விருதிறத்தோடொக்கும் என்றவாறு. உதாரணம்:--தெங்கங்காய் கமுகங்காய் எனவும், வேப்பங்காய் மருதங்காய் எனவும், காயென்பது அவ்விரண்டற்கும் வந்தது. பழமென்பதற்கும் இஃதொக்கும். பனந்தோல் வேப்பந்தோல், பனஞ்செதிள் வேப்பஞ்செதிள், தாழைவீழ் இத்திவீழ் என இவையும் இருபாற்குமுரியவாயின. மற்றிவையெல்லாம் வரையறையின்றிச் செல்லுமாயிற் புறக்காழன அகக்காழனவென வரையறுத்துப் பயந்ததென்னையெனின்,--அவ்விரு பகுதியுள் அடங்கக் கூறியவெல்லாம் புல்லெனவும் மரமெனவும்படாவென்றற்கும், 2அவற்றுறுப்பு ஓதியவாற்றாற் புல்லின்கண்ணும் மரத்தின்கண்ணும் பெருவரவினவா மென்றற்குமென்பது. (88) [இருதிணை யைம்பாற்பொருள்களை மரபு பிறழாமற் சொல்லல்வேண்டுமெனல்] | 644. | நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்துங் கலந்த மயக்க முலக மாதலி னிருதிணை யைம்பா லியனெறி வழாஅமைத் திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும். |
1. ஈர்--ஈர்க்கு என்றது மாவிலையின் நடுவே செல்லும் காம்பை. 2. அவற்றுறுப்பு என்றது புறக்காழுக்கும் அகக்காழுக்கும் ஓதிய உறுப்புக்கள் அவை, “தோடே மடலே” என்னுஞ் சூத்திரத்தானும், “இலையே தளிரே” என்னுஞ் சூத்திரத்தானும் கூறியன; |