பக்கம் எண் :

பொருளதிகாரம்677

இஃது, உலகியலெல்லாம் மரபிற்றிரியாமையின் அதன் சிறப்புணர்த்தி அதற்குக் காரணமுங் கூறுகின்றது.

இ--ள் : நிலனும் தீயும் நீரும் காற்றும் ஆகாயமு மென்னும் ஐம்பெரும் பூதமுங் கலந்த கலவையல்லது உலகமென்பது பிறிதில்லாமையின் அவற்றைச் சொல்லுமாறு சொல்லாது இருதிணைப் பொருளென வேறுபடுத்தும் ஐம்பாலென வேறுபடுத்தும் வழங்குகின்ற வழக்கெல்லாம் மரபிற்றிரியாத சொல்லொடு தழீஇ வரல்வேண்டும் என்றவாறு.

இதன் கருத்து:--“நிலம்வலிது, தீவெய்து, நீர்தண்ணென்றது, வளியெறிந்தது, விசும்பு அகலியது” என அஃறிணை வழக்கினவாயினும் இவை கலந்தவழியும் அவ்வாய்பாட்டான் வழங்காது உயர்திணை வாய்பாடு வேறாகவும், அஃறிணை வாய்பாடு வேறாகவும் அவை தம்முட் பகுதியாகிய ஐந்து பாற்சொல்லும் வெவ்வேறாகவும் வழங்குகின்ற வழக்கிற்குக் காரணம் மரபல்லது பிறிதில்லையென்றவாறு; எனவே, மரபினை வலியுறுத்தவாறு.

மற்று, நிலம் நீர் தீ வளி ஆகாயமென ஒன்று ஒன்றனுள் அடங்குமுறையாற் கூறுதல்செய்யாது மயங்கக் கூறியதென்னையெனின்,--அவை கலக்குங்கால் ஒரோ பொருளின்கண்ணும் அம்முறையானே நிற்குங்கொலென்று கருதினுங் கருதற்க, மயங்கி நிற்குமென்றற்கு அவ்வாறு கூறினானென்பது.

(89)

[செய்யுள் மரபு பிறழாமற் செய்தல்வேண்டுமென்றற்குக்
காரணங் கூறல்]

645.1மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி னான.

இது, மரபினையே வற்புறீஇயது.

இ--ள் : வழக்கினகத்து வரலாற்று முறைமை பிறழாது வருதலே தக்கது, மற்றுச் செய்யுள்செய்த சான்றோர் அதற்கேற்றவகையாற் செய்யப்பெறு வராகலின் என்றவாறு.


1. மரபுவழிப்பட்ட சொல்லாற் செய்யப்பெறுதலின் மரபு நிலைதிரிதல் செய்யுளுக்கில்லை எனவே செய்யுள் மரபுவழிப்பட்ட முறையாற் செய்யப்படுமென்பதாம்.