பக்கம் எண் :

678மரபியல்

அவர்க்கு இம்மரபு வேண்டுவதன்றுகொலென்று கருதினுங் கருதற்க.

“மரபே தானு,
 நாற்சொல் லியலான் யாப்புவழிப் பட்டன.”

(392)

என்றதனான், மரபுவழிப்படுங்காலென்பான்,

“மரபுவழிப் பட்ட சொல்லி னான.”

என்றானென்பது. ஆண்டுக் கூறிய மரபு உலகியலாகலான் அவ்வுலகியல் அவ்வாறாதற்குக் காரணம் ஈண்டுக் கூறிச் செய்யுட்கும் அதுவே காரணமெனக் கூறினானென்பது. இதனது பயன்: ‘செஞ்ஞாயிறு’ என்பது, வழக்கன்றாயினும் 1உண்மைநோக்கி அதனைச் 2செய்யுள்செய்யுஞ் சான்றோர் அவ்வாறு வழங்கினாற்போல உயர்திணைப் பொருளையும், ஐம்பெரும் பூதங்கள் அஃறிணையான் வழங்குதலுண்மை நோக்கி அவ்வாறுஞ் சொல்லப்பெறுவகொலென்று ஐயுற்றானை ஐயம் அறுத்தவாறு. அஃறிணைப்பாற்கும் இஃதொக்கும்; அல்லதூஉம், இன்ன செய்யுட்கு இன்ன பொருளுரித்தெனவும், இனைப்பகுதியாற் பெயர் பெறுமெனவும், மரபுபற்றியே சொல்லப்படுமென்றற்கும், இனி, நிறைமொழி மாந்தர் மறைமொழிபோல்வன சில 3மிறைக்கவி பாடினாருளரென்பதேபற்றி 4அல்லாதாரும் அவ்வாறு செய்தன் 5மரபன்றென்றற்கும் இது கூறினானென்பது; அவை: சக்கரஞ், சுழிகுளம், கோமூத்திரிகை, ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று என்றாற்போல்வன. இவை மந்திரவகையானன்றி வாளாது மக்களைச் செய்யுள்செய்வார்க்கு அகனைந்திணைக்கும் மரபன்றென்பது கருத்து. அல்லாதார் இவற்றை எல்லார்க்குஞ் செய்தற்குரியவென இழியக் கருதி அன்னவகையான் 6வேறு சில பெய்துகொண்டு அவற்றிற்கும் இலக்கணஞ்


1. உண்மை--ஞாயிற்றுக்குச் செம்மைக்குணம் உண்மை.

2. ‘செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்’ என்பது செய்யுள் (புறம்--38).

3. மிறைக்கவி--சித்திரகவி. தேவார முதலியவற்றில் ஏகபாதம், எழுகூற்றிருக்கை, மாலைமாற்று முதலியன தேவரைப் பற்றி அமைந் திருக்கின்றன.

4. அல்லாதார்--நிறைமொழி மாந்தர் அல்லாதரர்.

5. மரபன்றென்றற்கு என்ற பாடம் பொருத்தம். சி. வை. தாமோதரம்பிள்ளை பாடம் பொருத்தமில்லை.

6. வேறு சில--அதனோடு வேறு சில. அவை ஆசு, மதுரம், வித்தாரம் என்பன.