1இது, வழக்கினுண் மரபினைப் பிழைத்துக் கூறுவனவும் உளவென்பதுணர்த்துதல் நுதலிற்று. இ--ள் : வழக்கென்று சொல்லப்படுவது உயர்ந்தோர் வழங்கிய வழக்கே; என்னை? உலகத்து நிகழ்ச்சியெல்லாம் அவரையே நோக்கினமையின் என்றவாறு. அவரையே நோக்குதலென்பது, அவராணையான் உலக நிகழ்ச்சி செல்கின்றதென்றவாறு; எனவே, உயர்ந்தோரெனப்படுவார் அந்தணரும் அவர்போலும் அறிவுடையோருமாயினாரென்பது. (92) [நூல் இருவகையவெனல்] | 648. | மரபுநிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூறா மிருவகை யியல முதலும் வழியுமென நுதலிய நெறியின. |
இது, மேற்கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக்கணஞ் செய்வார்க்கும் வேண்டுமெனவும், அவ்விலக்கணம் இனைப் பகுதித்தெனவுங் கூறுகின்றது. இ--ள் : மரபுநிலையில் திரியாமை தமக்குக் குணனாக உடையவாகி எல்லாரானும் உரைக்கப்படும் நூல் இரண்டிலக்கணத்தவாகும்; முதனூலெனவும், வழிநூலெனவுங் கருதிக் கொள்ளும் அடிப்பாட்டான் என்றவாறு. “மரபுநிலை திரியிற் பிறிதுபிறி தாகும்.” (646) என்பதனை இதற்குமேல் எய்துவித்தானன்றே, அதனான் மரபுநிலை திரியாமையே 2தமக்குத் தகுதியாவதெனவும், இவ் 3விருவாற்றானும் ஒன்றனாற் செய்தலே மரபெனவுங் கூறியவாறு. ‘நுதலிய நெறி’ என்றதென்னையெனின்,--இன்னதே முதனூல் வழிநூலென்பதோர் யாப்புறவில்லை; ஒருநூல் பற்றி ஒருவன் வழிநூல் செய்தவழி அவ்வழி நூல்பற்றிப் பின்னொருகாலத்து ஒருநூல் பிறந்ததாயின் அது வழிநூலெனப்பட்டு
1. உயர்ந்தோர் வழக்கல்லாதன பிழைத்துக் கூறுவன என்பது கருத்து. 2. தமக்கு என்றது--இருவகை நூற்கும் என்றவாறு. 3. இருவாறு--முதல், வழி என்ற இருவாறு. |