வும் அதற்கிலக்கணமென்று ஒருவன் எதிர்நூலென்பதோர் நூல் பிற்காலத்துச் செய்யுமாயின் அஃது அதன் இலக்கணமெனப் படாதாகலானென்பது. மற்றுக் காலந்தோறும் வழக்கு வேறுபடுதலின் வழக்கு நூலும் வேறுபடவமையும் பிறவெனின்,-- “வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான” (647) என்றமையானும், அங்ஙனங் காலந்தோறும் ஒரோர் நூல் செய்யின் 1வழக்கல்லது எஞ்ஞான்றும் அவ்விலக்கணத்தாற் பயமின்றாகியே செல்லுமாகலானும் அது பொருந்தாதென்பது. அல்லதூஉம், முற்காலத்து வழங்கிவந்ததனை வழுவென்று களைபவாயினன்றே பிற்காலத்துப் பிறந்த வழக்கு இலக்கணமெனத் தழீஇக்கொள்வதென்க. 2இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்குஞ் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித்தல்லது அவற்றைக் கூறும் இலக்கணங் கூறலாகாமையினென்பது. 3இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப. அல்லதூஉம் இந்நூலிலக்கணம் வழக்கிற்குஞ் செய்யுட்குமே யன்றி அங்ஙனமாகப் பொருண்மேவும் 4பண்டம் முதலாயவற்றிற்கு இலக்கணஞ் செய்யுங்காலும் 5நியாயஞ் செய்யினுந் தமிழ்நூலதற்கிலக்கணம் எவ்வாற்றானும் இதுவேயென்றற்கும் ஈண்டுக் கூறினானென்பது. எனவே, பிறபாடை நூல்களாயின் இம்மரபு வேண்டுவதன்றாயிற்று. மற்று முதனூலினை இன்ன தென்பது துணிந்து உரையாரோவெனின்,--அதுவன்றே இனிக் கூறுகின்றதென்பது. (93)
1. வழக்கல்லது......செல்லும் என்றது--வழக்கே பயனாவதல்லது அவ்விலக்கணத்தாற் பயமின்றாகியே செல்லும் என்றபடி. 2. இந்நூலிலக்கணம்--நூல்செய்யு முறைமையைப் பற்றிய இவ்விலக்கணம். இவ்வோத்து--மரபியல். 3. இக்கருத்து--இந்நூலிலக்கணத்தைப் பின்வைத்த கருத்து. செய்யுளிலக்கணத்தை ஒன்பதாக வைப்பின் நூலிலக்கணம் இறுதியிற் கூறப்படல்வேண்டும் ஆதலின் அது எட்டே என்றபடி. 4. பண்டம்முதலாய--திரவியம்முதலாய. இது தருக்கம். 5. நியாயம்--நியாய இலக்கணம். |