[முதனூலாவது இதுவெனல்] | 649. | வினையி னீங்கி விளங்கிய வறிவின் முனைவன் கண்டது முதனூ லாகும். |
மேல் ஒன்றற்கு முதனூலாகியும் ஒன்றற்கு வழிநூலாகியும் வந்து தடுமாறுமென்றான், இனி அவ்வாறன்றி ஒன்றே முதனூலாகவுஞ் சிறுபான்மை உண்டென்கின்றது. இ--ள் : செய்வினையின் பயன் 1துவ்வாது மெய்யுணர்வுடையனாகிய முன்னோனாற் செய்யப்பட்டதே ஒருதலையாக முதனூலாவது என்றவாறு. எனவே, மேலைச் சூத்திரத்து முதனூலும் வழிநூலுமெனப்பட்டன முதலுஞ் சினையும்போலத் தடுமாறுமென்பதூஉம் இதுவாயின் தடுமாறாது எஞ்ஞான்றும் முதனூலாமென்பதூஉம் பெற்றாம். வினையென்பன, இருவினை; இன் நீக்கத்துக்கண் வந்தது. ‘விளங்கிய அறிவு’ என்பது முழுதும் உணரும் உணர்ச்சி. ‘அறிவின்’ என நின்ற இன் சாரியை. இன்ன அறிவினொடு கூடிய முனைவன் அறிவின் முனைவனெனப்படும். முன்னோனை 2முனைவனென்பது ஒருசொல் விழுக்காடாம். முன்னென்பதனை முனையென்பவாகலின். மற்று ‘வினையின்’ என்ற வேற்றுமை 3நிற்பதன் நிலையும் நீங்குவதன் நீக்கமும் கூறுமாகலின் ஒருகாலத்து வினையின்கணின்று ஒருகாலத்து நீங்கினான்போலக் கூறியதென்னை யெனின்,--அற்றன்று; வினைப்பயந் தொடரற்பாற் றுள்ளம் இலனென்பதன்றி அவர்க்குச் சில செய்கையுளவென்பது பல்லோர்க்கும் உடம்பாடாகலின், அவ்வினைக்கணின்றே, 4போகமும் பாவமும் மெய்யுணர்வுபற்றித் தெறப்பட்ட வித்துப்போலப் பிறப்பில் பெற்றியனாகி நீங்குமாகலின் அவ்வாறு கூறல் அமையு
1. துவ்வாது--அநுபவியாது. துவ்வாது உடையனாகிய என இயைக்க. 2. முனைவன்--முன்னோன். முனை--முன். விழுக்காடு--விழுகை. கோட்பாடு--கொள்கை என்பதுபோல. 3. நிற்பது--வினை; நிலை--அதன்கண் நிற்றல். 4. போகமும் பாவமும் நீங்குமாகலின் என இயைக்க. |